‘விஸ்வாசம்’சிவா ரஜினி படத்தை இயக்கப்போகிறாரா?...வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூர்யா...

Published : Aug 12, 2019, 12:34 PM IST
‘விஸ்வாசம்’சிவா ரஜினி படத்தை இயக்கப்போகிறாரா?...வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூர்யா...

சுருக்கம்

’விஸ்வாசம்’படத்தின் அட்டகாசமான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிவாவின் அடுத்த ஹீரோ யார் என்ற கேள்வியும் அதற்கு பல குழப்பமான விடைகளும் தொடர்ந்து கிளப்பப்பட்டு வந்தன. அக்குழப்பங்களுக்கு சிவாவின் பிறந்தநாளை ஒட்டி இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.  

’விஸ்வாசம்’படத்தின் அட்டகாசமான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிவாவின் அடுத்த ஹீரோ யார் என்ற கேள்வியும் அதற்கு பல குழப்பமான விடைகளும் தொடர்ந்து கிளப்பப்பட்டு வந்தன. அக்குழப்பங்களுக்கு சிவாவின் பிறந்தநாளை ஒட்டி இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.

பொங்கலுக்கு ரிலீஸான விஸ்வாசம் ஹிட் அடித்த நிலையில், ஏப்ரல் 22 மாலை 5 மணிக்கு, சூர்யா நடிக்கும் 39 ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.அதன்படி, சிறுத்தை, வீரம்,வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை,  சில நாட்களுக்கு முன் இயக்குநர் சிவா, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார், அதனால் சூர்யாவை வைத்து அவர் இயக்குவதாகச் சொல்லப்பட்ட படம் தள்ளிப் போகும் என்று சொல்லப்பட்டது.

இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.இன்று (ஆகஸ்ட் 12) இயக்குநர் சிவாவின் பிறந்தநாள். அதை முன்னிட்டு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியோடு, சூர்யா இயக்குநர் சிவா ஆகியோர் இணையும் சூர்யா 39 ஆவது படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.இதன்மூலம் சிவா அடுத்து உடனடியாக இயக்குவது சூர்யா படம்தான் ரஜினி படம் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை முடித்த பிறகு ஒருவேளை சிவா அடுத்து ரஜினி படத்தை இயக்கக்கூடும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!