தேசிய விருதுபெற்ற தகவல் கூட தெரியாமல் இருக்கும் காஷ்மீரத்து சிறுவன்...

By Muthurama LingamFirst Published Aug 12, 2019, 11:06 AM IST
Highlights

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370 சட்டப்பிர்வின் நீக்கத்தால் அங்குள்ள தொலைதொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஒருவர் இன்னும் அந்த தகவலைத் தெரிந்துள்ளமுடியாமல் இருக்கிறார்.
 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370 சட்டப்பிர்வின் நீக்கத்தால் அங்குள்ள தொலைதொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஒருவர் இன்னும் அந்த தகவலைத் தெரிந்துள்ளமுடியாமல் இருக்கிறார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை லடாக், காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவையிலும் இது குறித்த விவாதங்கள் ந்ழுந்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. 

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீருடனான தொலைத்தொடர்பு செய்திகள் துண்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் பட்டியலில் உருது மொழி படத்துக்கான விருதை ஹமீத் எனும் படம் பெற்றது.இந்த படத்தில் தல்ஹா அர்ஹத் ரேஷி எனும் காஷ்மீரைச் சேர்ந்த சிறுவன், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தான். இந்த சிறுவனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அச்சிறுவனுக்கு தெரியப்படுத்த படக்குழுவினர் தொலைத்தொடர்பு சேவை இல்லாமல் தவித்து வருகின்றனர்.  இது குறித்து அப்படத்தின் இயக்குனர் இஜாஸ் கான் கூறுகையில், ‘சிறுவனையும், அவனது தந்தையையும் தொடர்பு கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால், கூற முடியவில்லை. இது மிகுந்த மனவேதனையாக உள்ளது. இன்னும் சிறப்பான முயற்சிகள் எடுத்து அந்த சிறுவனிடம் தகவலை கொண்டு சேர்போம்’ என கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, இந்நிலை மாறி சகஜநிலை திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்று அறிவிக்கவில்லை.

click me!