’பிக் பாஸ் 3’யின் வின்னர் நிச்சயம் அவர்தான்...அடித்துச்சொல்லும் ஃபாத்திமா பாபு...

Published : Aug 12, 2019, 10:33 AM IST
’பிக் பாஸ் 3’யின் வின்னர் நிச்சயம் அவர்தான்...அடித்துச்சொல்லும் ஃபாத்திமா பாபு...

சுருக்கம்

பிக் பாஸ் 3 புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் நடிக்கும் படம் ’மேகி’.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வையும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு பேசும்போது,,,,,

பிக் பாஸ் 3 புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் நடிக்கும் படம் ’மேகி’.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வையும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு பேசும்போது,,,,,

’மேகி’ படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள் என்று கேட்டபோது, தர்ஷனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதன்பிறகு தான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘ என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறான் என்பது புரிந்தது. நிச்சயம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளனாக வருவான்.என் வீட்டிலும் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன்பிக் பாஸ் -3 யிலிருந்து வெளியே வந்ததும் என்னுடைய மகனாக தத்தெடுக்கப் போகிறேன்.

தற்போதுள்ள சூழலில் திரைப்படம் தயாரிப்பது என்பது சவாலான விஷயம். அதைத் துணிச்சலாக சனம் ஷெட்டி செய்திருக்கிறார். தர்ஷனை தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனமான விஷயம். அவரிடம் ஒரு நாயகனுக்கு உரித்தான அனைத்தும் இருக்கிறது. இன்று முதல் பார்வை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பு மேகாலயா போன்ற இடங்களுக்குச் சென்று நடத்தவிருக்கிறார்கள் என்றார்.

நாயகி சனம் ஷெட்டி பேசும்போது…..சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.அவர் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்.மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படித் தான் இருந்தார். எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!