
கடந்த ஜூன் 23ஆம் தேதி உலக நாயகன் கமலஹாசன் தொகுப்பில் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, 16 போட்டியாளர்களில் ஒருவர், 'சரவணன் மீனாட்சி', 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான கவின்.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்த ஆரம்ப நாட்களில், பெண் போட்டியாளர்கள் அபிராமி, சாக்ஷி , லாஸ்லியா, ஷெரின், என நான்கு பெண்களையும் காதலிப்பது போல் ஜாலியாக பழகினார்.
இது விளையாட்டு என தெரிந்தும் சில விபரீதங்களை ஏற்படுத்தியது. சாக்ஷி, உண்மையிலேயே கவினை காதலிப்பது போல் நடந்து கொண்டார். கவினுக்கும் சாக்ஷியுடனே அதிக நேரத்தை செலவிட்டதால், உண்மையில் இவர்கள் இடையே இருப்பது, காதலா? நட்பா? என பலர் குழம்பினர்.
இந்நிலையில் தான் கவின் லாஸ்யா மீது ஆர்வம் காட்ட துவங்கினார். மெல்ல மெல்ல சாக்ஷியிடம் இருந்து விலகிய, லாஸ்லியாவிடம் பழக துவங்கியது சாக்ஷிக்கு, கவின் மீது கோபத்தை ஏற்படுத்தியது.
பின் இது மிகப்பெரிய பிரச்சினையாக பிக்பாஸ் வீட்டில் வெடித்தது. சாக்ஷி வெளியேறியதும் கவின் - லாஸ்யா இருவருக்கும் பழக்கம் அதிகமானதால் தற்போது வரை இவர்கள் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இடையே இருப்பது என்ன என இவர்கள் இருவருமே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மக்கள் மத்தியில் கவிக்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்த போது, திடீரென்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தார். பிக்பாஸ் 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேற நினைக்கும் நபர் வெளியேறலாம் என கூறியதும், முதல் ஆளாக எழுந்து நின்று, யாருடைய பேச்சையும் கேட்காமல் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின், தன குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சரி செய்தார். கவின் சில சம்பவங்களால் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றபோது இருந்த பொலிவு இப்போது இல்லை. இதனை குறிப்பிட்டு அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் இயக்குனர் சிவா அரவிந்த்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கவின் உனக்கு எல்லாவற்றிலும் நல்லதே நடக்கும். நாம் மகிழ்ச்சியான விஷயத்தையே பேசுவோம். கவலைப்படாமல் இரு, எப்போதும் சந்தோஷமாக இரு, நீ ட்விட்டர் பக்கத்தில் வர உனக்காக காத்திருக்கிறேன். போலி கணக்குகளை நம்ப வேண்டாம். ஒவ்வொரு பயணத்தை அழிக்கவும், கவலைகளை மறைக்கவும் சிரிப்பு தான் சிறந்த வழி என தெரிவித்துள்ளார். இது கவின் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும் விதமாக இருக்கிறது.
இயக்குனர் சிவா அரவிந்த் கவின், கதாநாயகனாக நடித்துள்ள 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.