
சிம்பு நடித்த மாநாடு படம் தியேட்டர்களில் வெளியாகுமா ஆகாதா என்ற நீண்ட குழப்பத்திற்கு பிறகு ஒருவழியாக திரையரங்குகளில் மாநாடு படம் ரிலீசாகி உள்ளது. சிம்புவின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம், வில்லன் தோற்றத்தில் அனைவரையும் மிரள வைக்கிறார். ஒரு நாள் மீண்டும் மீண்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ரிப்பீட் மோடில் திரும்பத் திரும்ப நடந்தால் மனநிலை எப்படி இருக்கும்? இந்த உலகத்தை எப்படி புரிந்து கொள்வது? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் டைம் லூப் என்ற கான்செப்டுடன் இந்த மாநாடு படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு எஸ்.ஜே சூர்யா இணைந்து மிரட்டும் தமிழ் திரைப்படமாக மாநாடு வந்து உள்ளது .எஸ் ஜே சூர்யாவுடைய மிக அற்புதமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது இந்தப் படத்திற்கு பக்கபலமாக இருந்த ஒரு கதாபாத்திரம் என்றால் எஸ் ஜே சூர்யா என்றுதான் சொல்லியாக வேண்டும். அதோடு படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் யுவன் படத்தில் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். சிம்பு வரும் பலதரப்பட்ட காட்சிகளுக்கு பலவகையில் பிஜிஎம் கொடுத்து அசத்தியுள்ளார்.
இதில சிம்புவை காட்டிலும் அதிக பாராட்டு பெற்று வருவது எஸ்.ஜே சூர்யா தான். பல வருட காத்திருப்பான இந்த படம் சந்தித்த முதல் பிரச்சனையும் இவர் நடித்த காவல் துறை கேரக்டர் தான். அதில் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது சமூக கேடு என கூறி தமிழக சுகாதார துறையில் சிலர் புகார் செய்திருந்தனர்.
இதற்கிடையே கடந்த நவம்பர் 25-ம் தேதி வெளியான இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குபிறகு மாநாடு படக்குழுவினருக்கு எஸ்.ஜே சூர்யா நடிப்பு குறித்தும் பிரபல இயக்குனர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.