ஓட்டு வீட்டில் வசிக்கும் பிக்பாஸ் இசைவாணி... நேரில் சந்தித்த ஐக்கி - சப்போர்ட் பண்ணுங்க என வீடியோவில் உருக்கம்

Ganesh A   | Asianet News
Published : Dec 05, 2021, 09:27 PM IST
ஓட்டு வீட்டில் வசிக்கும் பிக்பாஸ் இசைவாணி... நேரில் சந்தித்த ஐக்கி - சப்போர்ட் பண்ணுங்க என வீடியோவில் உருக்கம்

சுருக்கம்

இசைவாணியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஐக்கி பெர்ரி, அங்கிருந்து இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும்.

அதன்படி கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டார். தஞ்சாவூரை சேர்ந்தவரான இவர், ராப் பாடகி ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இசைவாணி உடன் நெருக்கமாக பழகி வந்தார். இசைவாணியும் ஐக்கி வெளியேறியதற்கு முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டார்.

கனா பாடகியான இசைவாணி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இன்றளவும் ஓட்டு வீட்டில் தான் வசித்து வருகிறார். இந்நிலையில், இசைவாணியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஐக்கி பெர்ரி, அங்கிருந்து இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது இருவரும் தாங்கள் வருங்காலத்தில் இணைந்து இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டிலேயே இருவரும் ஆலோசித்ததாகவும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினர். மேலும் தங்களுக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!