பாடல் திருடிய பஞ்சாயத்துக்கு இயக்குநர் மூலம் சப்பைக்கட்டு கட்டும் வைரமுத்து...

By Muthurama LingamFirst Published Jan 27, 2019, 3:10 PM IST
Highlights

பாடகி சின்மயி மூலமாக ‘மிடு’ விவகாரத்தில் அவமானப்பட்டதற்கு இணையாக, இளம் பாடலாசிரியர்களின் பாடல் திருட்டு விவகாரத்திலும் அசிங்கப்பட்ட வைரமுத்து ‘வாகை சூடவா’ பட இயக்குநர் மூலம் அது தான் எழுதிய பாடலே என்று சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்திருக்கிறார். மற்ற கவிஞர்களின் ஒன்றிரண்டு வரிகளைப் பயன்படுத்துவது சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா என்பது போலவே இருக்கிறது அந்த இயக்குநரின் பேட்டி.

‘வாகை சூடவா’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘சர சர சாரக்காத்து’ பாடல் தன்னுடையது என்றும் கவிஞர் வைரமுத்து அதைத் திருடி தன் பெயரில் போட்டுக்கொண்டு பல விருதுகளும் வாங்கிவிட்டார் என்றும் இளம் பாடலாசிரியர் கார்திக் நேத்ரா கவிப்பேரரசுவின் மானத்தை வாங்கியிருந்தார். வலைதளங்கில் இச்செய்தி சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்தது. இதையொட்டி யுகபாரதி உள்ளிட்ட பாடல் பறிகொடுத்த பலரை மீடியா தொடர்புகொள்ள ஆரம்பித்தது. 

இந்நிலையில் இப்பிரச்சினையை மேலும் வளர்க்கவிடாமல் ‘வாகை சூடவா’ இயக்குநரைத் தொடர்புகொண்ட வைரமுத்து தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகத்தெரிகிறது.

அதையொட்டி யூடுபில் ஒரு வீடியோ வெளியிட்ட இயக்குநர் சற்குணம்  "வாகை சூட வா திரைப்படத்தில் கார்த்திக் நேத்தா ஒரு பாடல் எழுதி இருக்கிறார். போறாளே போறாளே பாடல் அது. அந்த பாடலை அவர் எழுதுவதற்கு முன்னார் இசைக்கு ஏற்ப நாங்கள் டம்மி லிரிக்‌ஸ் எழுதினோம். பின்னர் அது கார்த்திக்கிற்கு அனுப்பப்பட்டது. அவர் அந்த ட்யூனுக்கு புதிதாக வரிகள் எழுதி அனுப்பினார். நாங்கள் எழுதிய சில வரிகள் அந்த ட்யூனுக்கு ஏற்றார் போல இருப்பதால் சில இடங்களில் அதனையே பயன்படுத்திக் கொண்டோம். ஆனாலும் அது கார்த்திக் எழுதிய பாடல் தானே. 

அது  போல தான் ’சர சர சார காத்து’ பாடலும். அந்த பாடலுக்கு டம்மி லிரிக்சை கார்த்திக் நேத்தா தான் எழுதினார். பின்னர் அது வைரமுத்துவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் முழு ட்யூனுக்கும் அவர் வரிகள் எழுதி தந்தார். பின்னர் இந்த பாடலிலும் டம்மி லிரிக்சை நாங்கள் சேர்த்துக்கொண்டோம். ஆனால் இது வைரமுத்துவுக்கே தெரியாது" என்று அந்த வீடியோவில் சற்குணம் பேசியிருக்கிறார்.

click me!