50 கோடி தண்டச் சம்பளம்...நடிகர் விஜய்யின் மானத்தை வாங்கும் பிரபல இயக்குநர்...

By Muthurama LingamFirst Published Oct 11, 2019, 10:03 AM IST
Highlights

சர்ச்சை இயக்குநர் என்று பெயர் பெற்ற சாமி ‘உயிர்’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அடுத்து ‘மிருகம்’என்ற படத்தை இயக்கி அப்பட நாயகி பத்மபிரியாவை கன்னத்தில் அறைந்ததன் மூலம் பரபரப்பான நபராக அறியப்பட்டார். அவர் அடுத்து இயக்கிய சரித்திரம் படம் நின்று போன நிலையில் ‘சிந்து சமவெளி’என்ற செக்ஸ் படத்தை இயக்கி இன்னும் அதிகம் சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’படத்தை ரீமேக் செய்திருக்கும் அவருக்கு மீண்டும் பரபரப்பான விளம்பரம் தேவைப்படவே நடிகர் விஜயை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு 50 கோடி சம்பளம் எதற்காகக் கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதற்கான தகுதி அவருக்கு இல்லை. விரைவில் அவர் கேவலப்படப்போகிறார் என்றெல்லாம் அவரது மானத்தை வாங்கியிருக்கிறார் பிரபல இயக்குநர் சாமி.

சர்ச்சை இயக்குநர் என்று பெயர் பெற்ற சாமி ‘உயிர்’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அடுத்து ‘மிருகம்’என்ற படத்தை இயக்கி அப்பட நாயகி பத்மபிரியாவை கன்னத்தில் அறைந்ததன் மூலம் பரபரப்பான நபராக அறியப்பட்டார். அவர் அடுத்து இயக்கிய சரித்திரம் படம் நின்று போன நிலையில் ‘சிந்து சமவெளி’என்ற செக்ஸ் படத்தை இயக்கி இன்னும் அதிகம் சர்ச்சைகளில் சிக்கினார். தற்போது ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’படத்தை ரீமேக் செய்திருக்கும் அவருக்கு மீண்டும் பரபரப்பான விளம்பரம் தேவைப்படவே நடிகர் விஜயை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில்,...நாம் 4 முறைதான் சந்தித்துள்ளோம். 3 முறை வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. என்னுடைய பெயர் சாமி. நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். 2000 ஆம் ஆண்டில் உங்களை நேரடியாகச் சந்தித்து அன்றில் பறவைகள் என்ற குடும்பப் பாங்கான கதையைக் கூறினேன்.பிரியமானவளே பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்காக 2 மணி நேரம் ஒதுக்கிக் கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது பிரச்னை இல்ல.

நீங்கள் ரஜினிகாந்த் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்க. வாய் திறந்து பேசாதீங்க பிளீஸ். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசுகிறீர்கள். யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும் என்று. இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கங்கு தான் வைத்திருக்கிறது. நீங்கள் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் சினிமாத்துறை தாண்டி எந்த அளவில் நல்லவர் என்பது தெரியும். ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசிவிட்டு, அவர்களிடம் கைகொடுத்துவிட்டு அதை டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்தேன்.

நீங்கள் எந்தவிதத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாட்கள் நடிக்கிறீர்கள். அதற்கு கறுப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். இதில் எங்கே நேர்மை, உண்மை இருக்கிறது. மேடையில் மட்டும் ஏன் பொய்யாகப் பேசுகிறீர்கள். எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும்.

தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போகவும். வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க. ஒரு நாள் உண்மை வெளியில் வரும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரும் கேவலப்பட வேண்டி வரும். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்'என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்.

click me!