’லட்சுமி மேனனை தனுஷோட ஜோடின்னு நாங்க சொல்லவே இல்ல’...பதறும் டைரக்டர்

Published : Oct 28, 2018, 05:59 PM IST
’லட்சுமி மேனனை தனுஷோட ஜோடின்னு நாங்க சொல்லவே இல்ல’...பதறும் டைரக்டர்

சுருக்கம்

ஒரு ஆங்கில டெலிவிஷன் தொடரின் ஒரு பாகத்தை சுட்டு ‘ராட்சசன்’ படத்தை  ஹிட்டு ஆக்கிய   இயக்குநர் ராம்குமார் அடுத்து சுடச்சுட தனுஷ் படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இன்னும் கதை கூட ரெடியாகாத நிலையில், ஸ்டோரி டிஸ்கஷனுக்குப் பயன்படுவார் என்று நினைத்தோ என்னவோ தனுஷுக்கு அடுத்தபடியாக படத்துக்கு லட்சுமி மேனனை மட்டும் கமிட் செய்திருக்கிறார்கள்.

ஒரு ஆங்கில டெலிவிஷன் தொடரின் ஒரு பாகத்தை சுட்டு ‘ராட்சசன்’ படத்தை  ஹிட்டு ஆக்கிய   இயக்குநர் ராம்குமார் அடுத்து சுடச்சுட தனுஷ்
படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இன்னும் கதை கூட ரெடியாகாத நிலையில், ஸ்டோரி டிஸ்கஷனுக்குப் பயன்படுவார் என்று நினைத்தோ
என்னவோ தனுஷுக்கு அடுத்தபடியாக படத்துக்கு லட்சுமி மேனனை மட்டும் கமிட் செய்திருக்கிறார்கள்.

படத்தில் லட்சுமி மேனன், தனுஷுக்கு, ஒரு சில சீன்களே வந்து இறந்துபோகிற ஜோடியா அல்லது தங்கையா என்பதை இனிமேல் தயாராகப்போகிற
கதைதான் முடிவு செய்யவேண்டும் என்கிற நிலையில், சில முன்னணி நாளிதழ்களில் தனுஷுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் என்று வந்த செய்திகளைப் பார்த்து பதறிவிட்டார் இயக்குநர் ராம்குமார்.

அப்படியே தனது பதற்றத்தை ட்விட்டரில் பதிவிட்ட அவர்,...’வணக்கம். ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு  திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள்ளாகவே கதை நாயகி குறித்தான இது போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி’ என்றிருக்கிறார்.

‘றெக்க’ படம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆனபிறகு கமிட் ஆகியிருக்கும் இந்தப்படத்தில் தனக்கு கதாநாயகி பாத்திரம் இல்லை. ஏதோ ஒரு துண்டுதுக்கடா கேரக்டர்தான் என்பது லட்சுமி சேச்சிக்குத் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ