ஆமாம்.. அந்த கதை தான் சர்கார் பட கதை...! "தர்மத்தின் பக்கம்" நின்றதால் பதற்றத்தில் புலம்பும் பாக்கியராஜ்..! பகீர் பின்னணி.!

By thenmozhi gFirst Published Oct 28, 2018, 4:32 PM IST
Highlights

தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமிருக்க அதற்குள் கோலிவுட்டினுள் தவுசண்ட்வாலா சரவெடியாய் வெடித்துச் சிதறி கொண்டிருக்கிறது ‘சர்கார்’ படக்கதை விவகாரம். 
 

தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமிருக்க அதற்குள் கோலிவுட்டினுள் தவுசண்ட்வாலா சரவெடியாய் வெடித்துச் சிதறி கொண்டிருக்கிறது ‘சர்கார்’ படக்கதை விவகாரம். 

அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருருகதாஸ் அது தன்னுடைய கதை என்று சொல்லித்தான் ஹீரோ விஜய், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோரை கன்வின்ஸ் செய்து படமெடுத்தார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரையும், கதையையும் அநியாயத்துக்கு புகழ்ந்து தள்ளிவிட்டார் அரசியலுக்கு ஆசைப்படும் மாஸ் ஹீரோ விஜய். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ‘ஏ.ஆர்.முருகதாஸ் தனது கதையை திருடி ‘சர்கார்’ எனும் பெயரில் படமாக்கிவிட்டார்.’ என்று வருண் ராஜேந்திரன் என்பவர் தென்னிந்திய சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். முருகதாஸோ இதை ‘பொய்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் முருகதாஸின் கதை மற்றும் வருண் ராஜேந்திரனின் கதை இரண்டையும் வைத்து ஒப்பிட்டு அலசிய பாக்யராஜ் உள்ளிட்ட சங்க இயக்குநர்கள் டீம் ‘யெஸ்! வருணின் கதைதான் சர்கார் படத்தின் கதை.’ எனும் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் வருணிடம் கொடுத்த அறிக்கையில் “நீங்கள் 2007-ல் பதிவு செய்திருக்கும் ‘செங்கோல்’ படத்தின் கதைதான் ‘சர்கார்’ படத்தின் கதை, என்பதை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

எனவே இது தொடர்பாக நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் தடை சொல்ல மாட்டோம்.’ என்று வெளிப்படையாக குறிப்பிட்டுக், கையொப்பம் இட்டிருந்தனர். இந்த விவகாரமும், அந்த அறிக்கையும் வைரலாக பரவியுள்ளது. ‘திருட்டுக் கதையில் நடிக்கும் விஜய், லஞ்ச ஊழல் ஒழிப்பை பற்றி வாய் பேசலாமா?’ என்று குறிபார்த்து குண்டு வீசிக் கொண்டிருக்கின்றனர். 

விஜய் இந்த விவகாரத்தில் கருத்தே சொல்லாமல் மெளனம் காக்க, முருகதாஸோ ‘சர்கார் கதை என் சொந்த கற்பனை’ என்கிறார். இந்நிலையில் எல்லோருடையை கவனமும் இயக்குநர் கம் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜின்  பக்கம் திரும்பியுள்ளது. இதுபற்றி பேசியிருக்கும் அவர்...”அந்த கடிதத்தில் நாங்கள் குறிப்பிட்டிருப்பது அத்தனையும் உண்மை. இதை மறுப்பவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 

ஆனால் இந்த உண்மையை உடைத்துவிட்டதால் எனக்குத்தான் பிரச்னை. இனி விஜய்யையும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரையும் எப்படி எதிர்கொள்வேன் என தெரியாது. சங்கடம் தான். என் வீட்டுக்குள்ளேயே புயல் வீசுகிறது. என் மகன் சாந்தனுவோ விஜய்யின் ரசிகன். ‘நீ ஏங்பா அண்ணாவுக்கு சிக்கல் கொடுக்குறீங்க?”ன்னு குதிக்கிறான். 

என் மனைவி பூர்ணிமா இப்பதான் சீரியல்ல நடிக்க துவங்கியிருக்காங்க. இந்த பிரச்னையால அந்த சேனல் தரப்பு இவங்களை கை கழுவ கூட முடிவெடுக்கலாம். அந்த சீரியல்ல இவங்களை கட் பண்ணி வுடுறதுக்காக, இவங்க போட்டோவை வெச்சு மாலை போட்டு கதையை முடிச்சுட்டு வேற ஆளை உள்ளே கொண்டு வந்துடலாம். ஆக விஜய்யை பகைத்திருப்பதால் எனக்குதான் பிரச்னையே தவிர முருகதாஸுக்கெல்லாம் எந்த சிக்கலுமில்லை.” என்று பதறியிருப்பவர் கூடவே, ”ஆனால் இது எல்லாவற்றையும் மீறி, தர்மம்! அப்படின்னு ஒண்ணு இருக்குது. சங்கத்தின் தலைவர் இருக்கையில் உட்கார்ந்து, என்னிடம் வந்த பிரச்னையை விசாரிச்சு அதன் தீர்ப்பை நான் நேர்மையாக தந்திட்ட திருப்தி இருக்குது.” என்று சொல்லியிருக்கிறார்.

click me!