தல அஜித்தின் அடுத்த படம் குறித்த அட்டகாச அப்டேட்..

By thenmozhi gFirst Published Oct 28, 2018, 1:56 PM IST
Highlights

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் குமார், அடுத்த எச்.வினோத்தின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்திப் படம் ஒன்றின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது. 

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் குமார், அடுத்த எச்.வினோத்தின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்திப் படம் ஒன்றின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகவுள்ளது. 
 
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்தை இயக்கும் வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு கிடைத்துள்ளது. பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா, இந்தப் படத்தில் அஜித்துக்கு மீண்டும் ஜோடியாகியுள்ளார். டி இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, என பிரபல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின்ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக்குகள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. 

படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வீரம் படத்தைப் போன்றே இந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித்தை அடுத்து இயக்கும் வாய்ப்பு சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய பேசப்பட்ட திரைப்படங்களை இயக்கிய எச்.வினோத்துக்கு கிடைத்துள்ளது. அவருடைய இரு படங்களிலுமே திரைக்கதைக்காக அதிகம் மெனக்கெட்டு இருப்பார். புதிய தகவல்களையும் திரட்டிக் கொடுத்திருப்பார். அந்த வகையில் அவருடன் அஜித் குமார் இணையவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது, 

இந்தப் படத்தை மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் குணச்சித்ர வேடத்தில் அஜித் குமார் நடித்த போது போனி கபூர் தயாரிப்பில் நடிப்பதென ஒப்புக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீதேவி மறைந்து விட்ட நிலையில், வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறார் அஜித். 

2016 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், டாபிசி பன்னு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பட்டையக் கிளப்பிய படமான பிங்க்-ஐ தான் தமிழில் அஜித் குமாருக்கு ரீமேக் செய்யவுள்ளார் எச்.வினோத். மூன்று பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை வழக்கறிஞரான அமிதாப்பச்சன் தீர்த்து வைப்பதுமாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும், படத்தின் பிற்பாதி முழுவதும் நீதிமன்றத்தைச் சுற்றியே நகரும். இந்தப் படம் இந்திக்கு ஓகே. ஆனால் அஜித்துக்கு எப்படி செட் ஆகும் என்ற கேள்விக்கு விடை அளிக்கும் முயற்சியை வினோத் மேற்கொண்டு இருக்கிறார். 

தனக்கே உரித்தான பாணியில் கதை சொல்லும் வகையிலும், அஜித் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையிலும் சில சில மாற்றங்களை செய்யும் பணியில் இளம் இயக்குனர் வினோத் ஈடுபட்டுள்ளார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!