
சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மண்ரத்னம் இயக்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’படத்தின் மெகா நட்சத்திரப் பட்டியலில் நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனும் இணைந்துள்ளார். அத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.
மிக விரைவில் துவங்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’படத்தில் இதுவரை இந்திய சினிமா காணாத அளவுக்கு ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளத்தை இயக்குநர் மணிரத்னம் திரட்டிக்கொண்டிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி இப்படத்தில் கார்த்தி [வந்தியத்தேவன்], நயன் தாரா [நந்தினி] அனிஷ்கா [குந்தவை] ராஷி கன்னா [வானதி] ரகுல் ப்ரீத் சிங் [பூங்குழலி] அதர்வா [ராஜராஜன்] விக்ரம் [ஆதித்ய கரிகாலன்] சரத்குமார் [சுந்தர சோழன்] ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இதுபோக ஜெயம் ரவி, நாசர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரமான பெரிய பழுவேட்டரையராக நேற்று இயக்குநர் பார்த்திபன் தேர்வாகியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,...படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில்-பெருங்களிப்பில் 'பொன்னியின் செல்வன்'.அப்படத்திற்காக Spelling மட்டுமே கற்றிருந்த நான் Swimming கற்கிறேன்!... என்று பத்விட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.