’ஜோதிகா நடித்த ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்’...சூர்யா பெருமிதம்...

Published : Jul 28, 2019, 10:17 AM IST
’ஜோதிகா நடித்த ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்’...சூர்யா பெருமிதம்...

சுருக்கம்

’வாழ்க்கையில் நான் எடுக்கிற அத்தனை முயற்சிகளுக்கும் அசராமல் கைகொடுப்பவர் சூர்யா. அவர் இல்லையேல் நான் இல்லை. எனக்கு கிடைத்த ஜாக்பாட் என்றால் அது சூர்யாதான்’என்று தனது கணவரை அளவுக்கு மீறிப் புகழ்கிறார் நடிகை. 

’வாழ்க்கையில் நான் எடுக்கிற அத்தனை முயற்சிகளுக்கும் அசராமல் கைகொடுப்பவர் சூர்யா. அவர் இல்லையேல் நான் இல்லை. எனக்கு கிடைத்த ஜாக்பாட் என்றால் அது சூர்யாதான்’என்று தனது கணவரை அளவுக்கு மீறிப் புகழ்கிறார் நடிகை. 

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா,ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜாக்பாட். நடிகர் சூர்யா தயாரித்துள்ள இந்தப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி,ஒளிப்பதிவாளர் ஆனந்த் சண்டை இயக்குநர் ராக்பிரபு,உடை வடிவைப்பாளர் பூர்ணிமா,நடிகை தேவதர்ஷனி,நடிகர் ஜெகன்,நடிகர் தங்கதுரை,நடிகர் அஸ்வின்,நடிகர் டேனி,பாடகி பிருந்தா,பாடகர் ஆண்டனி தாசன்,பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்,பாடலாசிரியர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவ்விழாவில் பேசிய நடிகர் சூர்யா ’இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்துத் தான் செய்வார்.தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என்றார்.

அடுத்து பேசிய ஜோதிகா,’முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி.ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப்பாடல்களில் அது இருக்கிறது.

எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப்படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார்.அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்த படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்’ என்றார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை
திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி