கொரிய படத்துடன் சென்னையை ஒப்பிட்ட மித்ரன் ; பாவம் சார் சென்னை வாசிகள் !!

By Kanmani PFirst Published Nov 8, 2021, 4:21 PM IST
Highlights

ஆஸ்கர் விருது பெற்ற கொரிய படமான "பாரசைட்டில்" வரும் ஒரு காட்சியுடன் சென்னை வெள்ளம் குறித்த  இயக்குனர் மித்ரனின் பதிவு வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் சென்னை வாசிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சுரங்க பாதை யில் தேங்கியுள்ள நீரால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பணிக்கு கூட வெளிவரயிலாத அளவிற்கு சிக்கி தவித்து வருகின்றனர்.  மரங்களும் ஆங்காங்கே முறிந்து விழுவதால் சென்னையே பதட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மித்ரன் சென்னை நிலை குறித்து செய்துள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.  விஷால் மற்றும் அர்ஜுன் நடித்த "இரும்புத்திரை", சிவகார்த்திகேயனின் ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்  பி.எஸ் மித்ரன். இவர் இயத்தில் தற்போது கார்த்தி, நாயகனாக நடித்து வரும் சர்தார் படம் உருவாகி வருகிறது. இதில் ராசிக்கன்னா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்..கொரோனா ஊரடங்கால் காத்திருப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கியது. 

இதற்கிடையே பி.எஸ்.மித்ரன் ஆஸ்கர் விருது பெற்ற கொரிய படமான பாரசைட்டில் வரும் ஒரு காட்சியை ட்வீட் செய்து சென்னை வெள்ளம் என பதிவிட்டுள்ளார். இந்த காட்சியில் பெரும் மழைக்கு மறுநாள் வாகனங்களில் செல்லும் பணம் படைத்தவர்கள் மாசு குறைந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்ள, மறுபுறம் ஏழை மக்களோ தங்களது வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் அவதிப்பட்டு வரும் காட்சி இடம்பெற்றிருக்கும். இயக்குனரின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பொதுமக்கள்  இன்றைய சுழலில் சரியான பதிவு மித்ரன்  என பதிவிட்டு வருகின்றனர். 

pic.twitter.com/9ps7kVUbGE

— PS Mithran (@Psmithran)

 

click me!