தலையில் முடியின்றி மனிஷா கொய்ராலா ; புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து பதிவு

Kanmani P   | Asianet News
Published : Nov 08, 2021, 01:48 PM ISTUpdated : Nov 08, 2021, 01:51 PM IST
தலையில் முடியின்றி  மனிஷா கொய்ராலா ; புற்று  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து பதிவு

சுருக்கம்

புற்று நோயிலிருந்து மீண்டுள்ள மனிஷா கொய்ராலா புற்று நோயால் பதிக்கப்படடவர்கள் விரைவில் மீண்டு வர வாழ்த்து கூறியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. பாலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான இவருக்கு மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.  இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர். இதையடுத்து வெளியான பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட  படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது.

நட்சத்திர அந்தஸ்தில் ஜொலித்த மனிஷா கொய்ராலா கடந்த 2010-ம் ஆண்டு தனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை துவங்க எண்ணி பேஸ்புக் நண்பரான நேபாள தொழிலதிபர் சம்ரத் தஹாலை திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் தனது சுவடுகளை ஆழப்பதித்த மனிஷாவால் மனா வாழ்வில் வெற்றி பெற  இயலவில்லை. இவரது மண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. பின்னர் திரை உலகை விட்டு சிறுது காலம் ஒதுங்கி இருந்த மனிஷாவிற்கு பேரிடியாக வந்த செய்தி தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை கூறியதுதான்.

கடந்த 2012 ம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மையத்தில் 1 வருட காலம் சிகிச்சை எடுத்துள்ளார். தீவிர சிகிச்சைக்கு பிறகு புற்று நோயிலிருந்து மீண்ட மனிஷா கொய்ராலா தந்து அனுபங்களை அவ்வப்போது விழிப்புணர்வு பதிவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புற்று நோய் விழிப்புணர்வு நாளை ஒட்டி மனிஷா கொய்ராலா செய்துள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

சிகிச்சையின் போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன்;  இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோய் சிகிச்சையின் இந்த கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும், நிறைய அன்பு மற்றும் வெற்றியை பெற  நான் விரும்புகிறேன்.

"பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர்."
அதற்கு அடிபணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். என மனிஷா கொய்ராலா பதிவிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்