’மிகக் கேவலமாக நடந்துகொண்டார் பாரதிராஜா’... ‘96 பட இயக்குநர் கண்ணீர்

By sathish kFirst Published Nov 1, 2018, 4:42 PM IST
Highlights

அடுத்து வெளியாகும் தமிழ்ப்படங்களில் ’இந்தக்கதை திருடப்பட்டதல்ல. சொந்தமாக எழுதப்பட்டது’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டால் கொஞ்சம் நிம்மதியாகப் படம் பார்க்கலாம் என்கிற அளவுக்கு வரிசையாக திருட்டுக்கதை பஞ்சாயத்துக்கள். ‘சர்கார்’ பஞ்சாயத்து முடிந்து மீடியா  சற்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்க, இன்று காலை ‘96 பட இயக்குநர் பிரேமிடமிருந்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவசர அழைப்பு.

‘இது என் சொந்தக்கதைதான் என்பதற்கு என்னிடம் உள்ள ஸ்கிரிப்ட் பேப்பர்களே ஆதாரம். ஆனால் ‘96 ரிலீஸான மறுநாளிலிருந்தே ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். இவர்களோடு சேர்ந்து இப்போது  இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் சத்திரியனும் திடீரென என் கதைக்கு உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளார். 

இது சம்பந்தமாக என்னிடம் தொடர்புகொண்ட இயக்குநர் பாரதிராஜா என்னிடம் கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் கெட்டவார்த்தைகளால் அசிங்க அசிங்கமாகப்பேசினார். நான் மதிக்கும் இயக்குநர் என்பதால் பல்லைக்கடித்துக்கேட்டுக்கொண்டேன். இப்படிப்பட்ட தொடர்ந்த தொல்லைகளால் என்னால் என் பட வெற்றியைக்கூட கொண்டாட முடியவில்லை’ என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கண்ணீர் வடித்தார் பிரேம்.

click me!