ஒரு கோடி பெற்றுக்கொண்டு டிமிக்கி கொடுத்த மிஷ்கின்! ஆப்பு வைத்த நீதிமன்றம்!

By manimegalai aFirst Published Dec 19, 2018, 2:40 PM IST
Highlights

பிரபல இயக்குனர் மிஸ்கின் ஃபைனான்சியர் ஒருவரிடம் அவருடைய மகனை வைத்து 'சைக்கோ' என்ற படத்தை இயக்குவதாக கூறி , ரூபாய் ஒரு கோடி பெற்று கொண்டு ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிமன்றம் தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல இயக்குனர் மிஸ்கின் ஃபைனான்சியர் ஒருவரிடம் அவருடைய மகனை வைத்து 'சைக்கோ' என்ற படத்தை இயக்குவதாக கூறி , ரூபாய் ஒரு கோடி பெற்று கொண்டு ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிமன்றம் தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குனர் மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தை தொடர்ந்து தற்போது  'சைக்கோ' என்ற படத்தின் கதையை எழுதத் தொடங்கினார்.  இந்த கதையை, 150 படங்களுக்கு மேல்  ஃபைனான்ஸ் செய்துள்ள  ஃபைனான்சியர்,  ஒருவரிடம் கூறி... இந்த படத்தை அவருடைய மகனை நடிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுத்து அட்வான்ஸாக 1 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

ஆனால் சொன்னபடி ஃபைனான்சியரின் மகனை வைத்து படத்தை இயக்காமல், இந்தக் கதையை நடிகர் உதயநிதியிடம் கூறி அவரையே இந்த படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். தற்போது இந்த படத்தின் படபிடிப்பு 80 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்துவிட்டது.

இதனால் அந்த ஃபைனான்சியர், நல்ல மனதோடு பல மாதங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ செல்லாமல் கொடுத்த பணத்தை மட்டும் கொடுத்து விடுமாறு மிஷ்கினிடம் கேட்டுள்ளார். ஆனால் மிஸ்கின் தொடர்ந்து அந்த ஃபைனான்சியருக்கு டிமிக்கி கொடுத்து வந்ததால் கடுப்பான அந்த பைனான்சியர்  நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஃபைனான்சியரிடம் வாங்கிய ஒரு கோடி பணத்தை வட்டியுடன் மிஷ்கின் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது அந்த ஃபைனான்சியரின் மகனை வைத்து படத்தை இயக்கி கொடுத்துவிட்டு, அடுத்து, இயக்க உள்ள  'துப்பறிவாளன் 2  ' படத்தை துவங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

click me!