7 கோடி என்ன ஆச்சு! சொந்த அலுவலகம் இருந்தும் மூன்று லட்சம் வாடகை ஏன்? விஷாலை நாக்கை பிடுங்கும்படி கேட்ட எஸ்.வி.சேகர்!

Published : Dec 19, 2018, 01:35 PM ISTUpdated : Dec 19, 2018, 01:55 PM IST
7 கோடி என்ன ஆச்சு! சொந்த அலுவலகம் இருந்தும் மூன்று லட்சம் வாடகை ஏன்? விஷாலை நாக்கை பிடுங்கும்படி கேட்ட எஸ்.வி.சேகர்!

சுருக்கம்

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என இரண்டு பதவிகளை வகித்து வரும் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி இன்று தயாரிப்பாளர் சங்க அறைக்கு, தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.வி.சேகர், விஷால் மீது பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளார். 

மேலும் விஷால் பிரச்னையை முதலமைச்சர் பழனிச்சாமியிடம் எடுத்து  செல்ல உள்ளதாகவும், ஏற்கனவே இது குறித்து அவரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு என சொந்த அலுவலகம் இருக்கும் போது,  மாதம் மூன்று லட்சத்திற்கு ஏன் வாடகைக்கு அலுவலகம் எடுத்துள்ளார் விஷால் என கேள்வி எழுப்பினர்.  அதே போல் தயாரிப்பாளர் சங்க நிரந்தர வைப்பு நிதி ஏழு கோடி என்ன ஆனது என தெரியவில்லை என விஷால் நாக்கை பிடுங்கி கொள்ளும்படி கேள்விகளை அடுக்கினார். 

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை, தயாரிப்பாளர் சங்கத்திற்குள் விஷாலை நுழைய விட மாட்டோம் என கோரி தயாரிப்பாளர் விடியல் சேகர், தயாரிப்பாளர் சங்க அறைக்கு போட்டு போட்டு தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனையின் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் படம் குறித்து வந்த அதிர்ச்சி அப்டேட்! தளபதி ரசிகர்கள் மீண்டும் அப்செட்.!
Thalaivar Thambi Thalaimaiyil Box Office : ஜீவா படம் 5 நாட்களில் வாரிசுருட்டிய வசூல் இத்தனை கோடியா?