
தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டுப்போடும் ரகளையான நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ‘தமிழ்சினிமாவை புற்றுநோய் போல அரித்துக்கொல்லும் தமிழ்ராக்கர்ஸின் பார்ட்னரே விஷால்தான் என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது’ என்ற அதிர்ச்சித் தகவலை முன்னணி தயாரி[ப்பாளரும் இயக்குநர் ஏ.எல்.விஜயின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன் வெளியிட்டார்.
பதவிக்கு தான் வந்தவுடம் முதலில் தமிழ் ராக்கர்ஸை நசுக்குவோம் என்று சொல்லித்தான் விஷால் பதவிக்கே வந்தார். ஆனால் அதுதொடர்பான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாததோடு, அவர்கள் தொடர்பாக தொடர்ந்து மவுனம் காத்துவருகிறார் விஷால். இன்னும் சொல்லப்போனால் விஷால் பதவிக்கு வந்த பிறகு தம்ழ்ராக்கர்ஸின் அட்டகாசம் இன்னும் அதிகரித்திருக்கிறது.
முன்பு படங்களை மட்டும் திருட்டுத்தனமாக வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் வரவர படங்களின் ஆடியோக்களையும் தயாரிப்பாளர்கள் வெளியிடுவதற்கு முன்பே வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு தமிழ்ராக்கர்ஸில் விஷால் பார்ட்னராக இருக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது என்று வெடிகுண்டு வீசுகிறார் அழகப்பன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.