தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டுப் போடச்சொன்னவரே விஷால்தான்... நம்புனா நம்புங்க...

Published : Dec 19, 2018, 01:59 PM ISTUpdated : Dec 19, 2018, 02:00 PM IST
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டுப் போடச்சொன்னவரே விஷால்தான்... நம்புனா நம்புங்க...

சுருக்கம்

இன்னொரு பக்கம் சங்கத் தலைவர் விஷால் அளித்த எந்த  வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்துகொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது.  

விஷால் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமையாகிவிட்டார். ஓராண்டுக்குள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் பூட்டு போடுங்கள் என்று சொன்னவரே  விஷால்தான் . அவர் சொன்னபடிதான் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை பூட்டிவிட்டோம்’ என்கிறார் தயாரிப்பாளர் ஜே.கே.ரித்திஷ்.

இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன் கூடிய விஷால் அதிருப்தியாளர்கள் அவர் மீது  எண்ணற்ற புகார்களை அடுக்கினர். மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் தொகையை முழுமையாக கொடுக்காதது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது. செயற்குழு ஒப்புதல் இல்லாமல் விஷால் தனிச்சையாக முடிவெடுப்பது, இளையராஜா பாராட்டு விழாவை ஒப்புதல் இல்லாமல் நடத்துவது, பைரசியை ஒழிக்காதது, பிலிம் சேம்பரில் உள்ள அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் செயல்படாமல், தனியாக மாதம் ரூ.3 லட்சம் வாடகை கொடுத்து செலவு செய்வது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் முன் வைக்கின்றனர்.

இன்னொரு பக்கம் சங்கத் தலைவர் விஷால் அளித்த எந்த  வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்துகொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது.

கடந்த நிர்வாகம் சங்கத்துக்கு வைத்து சென்ற வைப்புத்தொகையில் மோசடி நடந்துள்ளது. பைரசியை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை என்ன ஆனது? கியூப் கட்டணத்தை குறைப்பதற்காக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டதில் எந்த பயனும் ஏற்படவில்லை. பதிலாக முன்பைவிட கட்டணம் அதிகமாகி உள்ளது.

காலியான பதவிகள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஆனால் டிசம்பர் மாதம் ஆகியும் பொதுக்குழு கூட்டப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடனடியாக பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

ஆக விஷால் இப்பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல மீடியா முன் ஆஜராவதைத் தவிர்ப்பதால் நிமிடத்துக்கு நிமிடம் விஷாலின் க்ரைம்ரேட் எகிறிக்கொண்டே போகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!