
வாழ்க்கையில் மாபெரும் வெற்றியை எட்டும்போது முதலில் நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கப்படவேண்டியவர்கள் ஆசிரியர்களே என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக நினவூட்டுகிறார் பரியேறிய பெருமாள் மார்செல்வராஜ்.
சினிமாவில் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றிபெற்றதுடன் பல்வேறு விழாக்களில் விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது பரியேறும் பெருமாள்.இந்நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் தான் படித்த பள்ளிக்கூடத்திற்க்கு பல வருடங்களுக்குப்பிறகு சென்று தனது பள்ளி ஆசிரியர்களை சந்தித்திருக்கிறார்.
திருநெல்வேலி அருகில் உள்ள கருங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்ற இயக்குனர் இந்த சந்திப்பைப்பற்றி கூறுகையில்...
பதினாறு வருடங்களுக்கு பிறகு பள்ளிகூடத்திற்கு போயிருந்தேன். என்னை பார்த்தவுடன் பத்மா டீச்சர் சிரித்த சிரிப்பும் அடைந்த கொண்டாட்டமும் போதும் நான் எடுத்த சினிமா என்னை எல்லாருக்குமே மீட்டெடுத்து கொடுத்திருக்கிறதுஎன்று புரிந்துகொள்ள. அந்த முழு நாளும் என் ஆசிரியர்களின் உள்ளங்கையில் குளிர்ந்து இருந்தேன் நான். என் கனவு என் தவறுகளை அங்கீகரித்தது, முட்டி போட்ட வகுப்பறையை முத்தமிட வைத்தது, உடைத்து நொறுங்கிய பெஞ்சுகளை எல்லாம் தேடி போய் தேம்பி அழ வைத்தது.கசிந்துருகிய கண்ணீரில் தெரிந்துகொண்டேன்என்னை விட என் கனவு என்னை அதிகம் நேசிக்கிறது’
என்கிறார் மாரி செல்வராஜ்.
தனது ஆசிரியர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவற்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, ’அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது’ என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.