‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியே கிடையாது...அப்புறம் யார் மஞ்சு வாரியர்?...

By Muthurama LingamFirst Published Jan 26, 2019, 10:14 AM IST
Highlights

மலையாள நடிகை மஞ்சு வாரியர் ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும், தன்னை விட வயதில் மூத்த நடிகையுடன் ஜோடி சேர தனுஷ் எப்படி ஒத்துக்கொண்டார் என்று குழம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு செய்தி. ‘அசுரன்’ படத்தி தனுஷுக்கு தோழி, காதலி, மனைவி என்று ஒரு பாத்திரமும் கிடையாது.

மலையாள நடிகை மஞ்சு வாரியர் ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும், தன்னை விட வயதில் மூத்த நடிகையுடன் ஜோடி சேர தனுஷ் எப்படி ஒத்துக்கொண்டார் என்று குழம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு செய்தி. ‘அசுரன்’ படத்தி தனுஷுக்கு தோழி, காதலி, மனைவி என்று ஒரு பாத்திரமும் கிடையாது.

தனது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணியின் ‘வெக்கை’ நாவலே ‘அசுரன்’ ஆக உருவெடுக்கிறது. இக்கதையை மாற்றியமைக்கவோ, புதைய கேரக்டர்களைப் புகுத்தவோ கண்டிப்பாக பூமணி சம்மதித்திருக்கமாட்டார். வெற்றி மாறனும் ஒரு நல்ல நாவலை சிதைத்து படமாக்கக் கூடியவர் அல்ல என்பதால் இக்கதையில் தனுஷுக்கு ஜோடி இல்லை.

’அசுரன்’ கதை இதுதான்...ஒரு கொலையோடு ஆரம்பிக்கிறது கதை. ஒரு சிறுவன் தன அண்ணனைக் கொன்ற ஒருவனை போட்டுத் தள்ளுகிறான். அப்புறம் கதை பூராவும் அவனும் அவன் அப்பாவும் ஓடி ஒளிவது மட்டும்தான். கதையில் வேறு ஒன்றுமே கிடையாது. 

ஆனால் கதை பூராவும் தெரிவது அன்பு. அப்பாவுக்கும் பையனுக்கும், பையனுக்கும் அண்ணனுக்கும், சித்திக்கும் பையனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. குடும்பம், சுற்றம், உறவினர்கள், பங்காளிகள், சாதி சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவு; வாழ்க்கையின் தவிர்க்க முடியாத சமரசங்களின் ஊடாகவும் தெரியும் அன்பு. ஒரு கொலை, பழி வாங்குதலை foreground-இல் வைத்து அதில் அன்பை மட்டும் காட்டி இருப்பது பூமணியின் சாதனை. கதை பூராவும் ஒளிந்து வாழும்போது என்ன சாப்பிடுகிறார்கள், என்ன சமைக்கிறார்கள் என்றுதான் போகும்.

நாவலைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படிக்காமல் கீழே வைக்கமுடியாது. திரையிலும் அந்த மாய வித்தையை வெற்றிமாறன் கண்டிப்பாக நிகழ்த்திக்காட்டுவார்.

click me!