‘ஒரு நாளைக்கு 15 முறையாவது விபசாரி என்று விமர்சிக்கப்படுகிறேன்’...வைரமுத்துவை விடாது துரத்தும் சின்மயி...

By Muthurama LingamFirst Published Jan 26, 2019, 10:59 AM IST
Highlights

‘கவிஞர் வைரமுத்து என்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று பகிரங்கமாக சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த நாள் முதல் இதோ மேடையில் பேசிக்கொண்டிருக்கிறேனே இன்று வரை தினமும் குறைந்த பட்சம் 15 பேராவது என்னை ’விபசாரி’ என்று விமர்சிக்கிறார்கள்’ என்கிறார் டப்பிங் ஆட்ர்டிஸ்டும் பாடகியுமான சின்மயி.

ஹைதராபாத்தில் இலக்கிய அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த ‘மி டு’ த வே ஃபார்வர்ட்’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சின்மயி, வைரமுத்து மீது இன்னும் கொஞ்சமும் கோபம் குறையாதவராக கிழித்துத் தொங்கவிட்டார்.

‘வைரமுத்துவை நான் அம்பலப்படுத்தியவுடன் என்னை ஒரு ஜாதிக்காரியாக உருமாற்றினார்கள். அதில் அரசியலையும் கலந்து பி.ஜே.பியிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாகவும் கதை கட்டிவிட்டார்கள். என் சினிமா வாய்ப்புகள் அத்தனையையும் காலி செய்தார்கள்.  என்னைப் பலாத்காரம் செய்யப்போவதாகவும் எவ்வளவோ மிரட்டல்கள். வைரமுத்துவை நான் அம்பலப்படுத்திய நாளிலிருந்து இன்று வரை தினமும் குறைந்த பட்சம் 15 பேராவது விபசாரி பட்டம் கட்டுகிறார்கள்.

புகார் சொன்ன என்னைக் கீழ்த்தரமாக நடத்தாமல் இருந்திருந்தால் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் அவரது லீலைகளை அம்பலப்படுத்தியிருப்பார்கள். ஆனால் சமூகத்தில் நான் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து பலரும் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்’ என்றார் சின்மயி.

click me!