ரஜினிக்கு முன்னாடி கமல்... இளம் இயக்குநருக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 31, 2020, 8:24 PM IST
Highlights

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருவதால், அந்த கேப்பில் கமல் ஹாசனை வைத்து ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் நடிப்பில் “மாஸ்டர்” படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாகவும், அதை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. முதலில் கமல் ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என உலக நாயகன் தான் முடிவு செய்தார். 

நான் நடிக்காவிட்டாலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை பிடித்து போக, ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருவரும் அடுத்தடுத்து அரசியல் மற்றும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் இந்த படத்தை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரஜினி - கமல் இணைய உள்ள படத்தின் நிலை குறித்து பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “தற்போது அந்த படம் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இதுகுறித்த முடிவை எடுக்க வேண்டும். அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்" என கூறினார். இதனால் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் இணைந்து நடிக்க உள்ள புதிய படம் ட்ராப் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருவதால், அந்த கேப்பில் கமல் ஹாசனை வைத்து ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அதற்கான வேலைகள் ஆரம்பாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், அதனை மனதில் கொண்டு முழுக்க முழுக்க அரசியல் கதையை லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

click me!