’ரஜினியின் அழைப்புக்காக இன்றும் காத்திருக்கிறேன்’...கைநழுவிப்போன வாய்ப்பை விவரிக்கும் கவுதம் மேனன்...

By Muthurama LingamFirst Published Sep 3, 2019, 12:31 PM IST
Highlights

ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்துப் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அது கொஞ்சமும் எதிர்பாராமல் கைநழுவிப் போனது. ஆனால் அவரை வைத்துக் கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன். அவர் அழைப்புக்காக இன்றும் காத்திருக்கிறேன்’என்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன்.

‘ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்துப் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அது கொஞ்சமும் எதிர்பாராமல் கைநழுவிப் போனது. ஆனால் அவரை வைத்துக் கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன். அவர் அழைப்புக்காக இன்றும் காத்திருக்கிறேன்’என்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன்.

ஆறு ஆண்டுகால நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பின் கவுதம், தனுஷ் கூட்டணியின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ள நிலையில் அப்பட ஹீரோ தனுஷ் குறித்தும், ரஜினி குறித்தும் சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கவுதம். அது குறித்துப் பேசிய அவர்,’ 2013ல் இப்படம் துவங்கியபோது தனுஷ் மிக உற்சாகமாகவே இப்படத்தில் நடிக்கத்துவங்கினார். பின்னர் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சம்பளம் தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்பால் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடிக்கப்போய்விட்டார். படம் ரிலீஸாக ஆறு ஆண்டுகாலம் ஆகிவிட்டதே ஒழிய நான் படப்பிடிப்பு நடத்தியது வெறும் 55 நாட்கள்தான். இடையில் எவ்வளவோ கசப்பான சம்பவங்களைக் கடந்து வந்துவிட்டேன். இப்போது யாருடன் வேலை செய்யவேண்டும் யாருடன் செய்யக்கூடாது என்கிற தெளிவுக்கு வந்திருக்கிறேன்.

2015ம் ஆண்டு ரஜினியை வைத்துப் படம் இயக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. அவரது வீட்டில் வைத்து இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும் இன்று இரவுக்குள் பதில் சொல்கிறேன்.காத்திருங்கள் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் என்ன காரணத்தாலோ அன்று மாலை 4 மணிக்கே அப்படத்தை நான் இயக்கப்போவதில்லை என்ற தகவல் எனக்கு வந்தது. எனக்கு வரவேண்டிய அந்தப் படத்தை [கபாலி] பா.ரஞ்சித் இயக்கினார். இன்றும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க அதே உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்’என்கிறார் கவுதம். 

click me!