மீண்டும் அறம் கோபி நயினாருடன் மோதும் பா.ரஞ்சித்.... ஒரே கதையை படமாக்குகிறார்கள்

By vinoth kumarFirst Published Nov 14, 2018, 10:44 AM IST
Highlights

பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரே நேரத்தில் ‘அறம்’ இயக்குநர் கோபிநயினாரும், ‘காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தும் படம் இயக்கவிருப்பதாக அறிவித்திருப்பது திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரே நேரத்தில் ‘அறம்’ இயக்குநர் கோபிநயினாரும், ‘காலா’ இயக்குநர் பா.ரஞ்சித்தும் படம் இயக்கவிருப்பதாக அறிவித்திருப்பது திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே தனது ‘கருப்பர் நகரம்’ கதையைத்தான் பா.ரஞ்சித் ‘மெட்ராஸ்’ படமாக எடுத்தார் என்று கோபி நயினார்  பஞ்சாயத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கோபிநயினார் சில மாதங்களுக்கு தனது லட்சியப்படமாக மிர்சா முண்டா இருக்கும். அதை இயக்க பெரும்பட்ஜெட் தேவைப்படுவதால் தற்போதைக்கு கதை குறித்த ஆராய்ச்சியில் மட்டுமே இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில்...“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருக்கிறது. 

கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இதற்காக வட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்க இருக்கிறது. 

பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு பாலிவுட் உலகில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது’ என்று அறிவித்திருக்கிறார். இச்செய்தி கண்டு அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளார் கோபிநயினார்.

click me!