
இந்தியில் ஏ லம்ஹே ஜூடாய் ஜே, தபாங் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரஸாமி தேசாய். குஜராத்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வரும் இவர், இந்தி சிரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்தியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!
2012ம் ஆண்டு தன்னுடன் சிரீயலில் நடித்த நந்திஷ் சாந்து என்பவரை திருமணம் செய்து கொண்ட ரஸாமி, மூன்றே ஆண்டுகளில் விவகாரத்து செய்தார். அதன் பின்னர் படவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர், சமீபத்தில் பிரபல இயக்குநர் மீது கூறியுள்ள மீடூ புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு 16 வயது இருக்கும் போது, தனது முதல் பட இயக்குநரான சூரஜ் என்பவர் படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் சினிமாவில் முன்னேற முடியும் எனக்கூறி தன்னை வற்புறுத்தியதாக கூறியுள்ளார். அதற்கு தான் பிடிகொடுக்காததால், ஆடிஷன் இருப்பதாக என்னை ஒரு நாள் தனியாக வரவழைத்தார். அன்று நான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இரண்டரை மணி நேரம் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் அவரது செயலை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருந்தேன். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து தப்பினேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!
பின்னர் இதுபற்றி தனது அம்மாவிடம் கூறியதாகவும், அந்த இயக்குநரை உணவு விடுதிக்கு வரவழைத்த அவரது அம்மா கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இனி என் மகளிடம் தப்பாக நடந்தால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் 16 வயதில் தனக்கு நேர்ந்த பகீர் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ரஸாமி தேசாய்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.