’என்னம்மா’லட்சுமி ராமகிருஷ்ணனின் பி ஆர் ஓ வாக மாறிய இயக்குநர் பாரதிராஜா...

By Muthurama LingamFirst Published Jun 27, 2019, 10:50 AM IST
Highlights

படங்கள் இயக்கும் வேலையை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவ்வப்போது நடிப்பதும், மீதி நேரங்களில் அறிக்கைகள் எழுதுபவராகவும் மாறியிருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘என்னம்மா இப்பிடிப் பண்ணிட்டீங்களேம்மா’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’படத்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.

படங்கள் இயக்கும் வேலையை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவ்வப்போது நடிப்பதும், மீதி நேரங்களில் அறிக்கைகள் எழுதுபவராகவும் மாறியிருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘என்னம்மா இப்பிடிப் பண்ணிட்டீங்களேம்மா’ புகழ் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’படத்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’படம் நாளை தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரத்யேகக்காட்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா ஒரு பாராட்டு மடல் எழுதியுள்ளார். அதில்,...இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே, இது ஒரு அழுத்தமான கருப்பொருளை கொண்டிருக்கிறது, நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்று நான் நம்பினேன். ஆனால் அது எனது எதிர்பார்ப்புகளை எல்லாம் மீறி என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. படம் முழுவதும், லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய பரிமாணத்தைப் பார்த்து நான் மகிழ்ந்தேன்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், வெறும் பார்வையாளராக இருக்கும் நம்மை அந்த குடும்பத்தின் ஒரு பார்வையாளராக மாற்றும் மாயாஜாலம் தான். எந்த ஒரு முகத்திலும் சினிமா நிழல்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. வசன உச்சரிப்பு, நடிப்பு, முகபாவனை என நடித்த ஒவ்வொருவரும், படத்தில் தோன்றும் ஒவ்வொரு பொருளும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பானதாக இருந்தது.

கடுமையான சென்னை வெள்ளத்தின்போது நான் சென்னையில் இருந்தபோதிலும், அங்குள்ள மக்களின் உண்மையான வலியை நான் உணரவில்லை, ஆனால் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மறக்கமுடியாத வேதனையான தருணங்களின் துயரமான சித்தரிப்பை ஒரு துல்லியமான பார்வையுடன் அவர் மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார். அத்தகைய ஒரு யதார்த்தமான கதையை அவர் எப்படி சிந்தித்தார் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நான் எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை, உண்மையில் இந்த கதை என் இதயத்தின் ஆழம் வரை சென்று கனமாக்கியது.

சகோதரிகள் மற்றும் நடிகைகளான விஜி சந்திரசேகர், சரிதா இருவருக்குமே அனைவரையும் ஈர்க்கும், முகபாவனையை சிறப்பாக வெளிப்படுத்தும் கண்கள் உண்டு. தற்போது விஜியின் மகள் லவ்லின் அதே கவர்ச்சியான பண்புகளைக் கொண்டிருப்பது சிறப்பு.தொழில்நுட்ப கலைஞர்கள் தான் படத்தின் முழுமையான ஆன்மா. அவர்கள் தான் கதாபாத்திரங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள். “ஹவுஸ் ஓனர்” படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும், இத்தகைய சிறந்த திரைப்படத்தை வழங்கியதில் பெருமிதம் கொள்ளலாம் என்று நான் கூறுவேன்’என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார். 

லட்சுமி ராமகிருஷ்ணனின் இதற்கு முந்தைய சில படங்களுக்கும் இயக்குநர் அய்யா அவர்கள் இவ்வாறே புளகாங்கிதம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!