கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிரபல தெலுங்கு நடிகை மரணம் !

Published : Jun 27, 2019, 09:11 AM IST
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிரபல தெலுங்கு நடிகை மரணம் !

சுருக்கம்

1960 மற்றும் 70 களில் தமிழில் சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகை விஜய நிர்மலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.. தமிழ்நாட்டில் பிறந்தாலும் தெலுங்கு சினிமாவில் நடிகை மற்றும் இயக்குனராக கலக்கியவர்.

விஜய நிர்மலா  ஆந்திர திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர். இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். 2002இல் இவரது பெயர் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

கடந்த 2008இல், தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக "ரகுபதி வெங்கையா விருதினைப்" பெற்றுள்ளார்.  இவரும், தெலுங்கு நடிகையான  சாவித்திரி ஆகிய இருவர் மட்டுமே புகழ் பெற்ற  சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள்.

விஜய நிர்மலா, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த  தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை திரைப்படத் தயாரிப்பில் பணிபுரிந்தவர். இவரது முதல் கணவர் கிருஷ்ண மூர்த்தி மூலமாக நரேஷ் என்கிற மகன் பிறந்தார்.

நரேஷ் தற்போது நடிகராக இருக்கிறார். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை மணந்து கொண்டார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!