நிலமோசடி வழக்கில் ராதாரவி, சரத்குமார் கைதாக வாய்ப்பு...காப்பாற்றுவாரா எடப்பாடி...

By Muthurama LingamFirst Published Jun 27, 2019, 10:27 AM IST
Highlights

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வரும் ஜூலை 8ம் தேதி வெளியாகவிருக்கும் கோர்ட் தீர்ப்புக்குப் பின்னரே தெரியவரும் என்னும் நிலையில், ஏற்கனவே நடந்துவந்த நிலமோசடி வழக்கில் நடிகர்கள் ராதாரவி,சரத்குமார் ஆகியோர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் அதிமுகவில் ஐக்கியமானதால் அவர் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றப்படலாம் என்று தெரிகிறது.

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வரும் ஜூலை 8ம் தேதி வெளியாகவிருக்கும் கோர்ட் தீர்ப்புக்குப் பின்னரே தெரியவரும் என்னும் நிலையில், ஏற்கனவே நடந்துவந்த நிலமோசடி வழக்கில் நடிகர்கள் ராதாரவி,சரத்குமார் ஆகியோர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் அதிமுகவில் ஐக்கியமானதால் அவர் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றப்படலாம் என்று தெரிகிறது.

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்று மோசடி செய்ததாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ், காளை ஆகியோர் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் கிராமத்தில் இருந்த நடிகர் சங்கத்தின் இடத்தை உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் பதவியை முறைகேடாக பயன் படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாரை காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நில மோசடி வழக்கில் சிக்கிய 4 பேரில் காளை இறந்து விட்டார். ராதாரவி, சரத்குமார் ,செல்வராஜ் மீது வழக்கு நடந்து வந்தது.இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி குற்றம்சட்டப்பட்டவர்கள் மீது சார்ஜ்ஷீட் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து நில மோசடி வழக்கு வேகம் எடுத்து முறைகேடு செய்தவர்கள் கைதாகலாம் என்ற நிலையில் வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் சங்க தலைவர் நாசர் மீண்டும் இந்த வழக்கை விரைவாக விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நாசர், விஷால் ஆகியோரை அழைத்து காஞ்சிபுரம் போலீசார் விளக்கம் பெற்றனர்.நில மோசடி வழக்கு மீண்டும் வேகம் பெறுவதை பார்த்த ராதாரவி திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார்.நடிகர் சங்க நில மோசடி வழக்கில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ராதாரவி அதிமுகவில் சேர்ந்திருக்கிறார் என்று தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி ராதாரவி, சரத்குமார், செல்வராஜ் ஆகியோருக்கு காஞ்சிபுரம் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர்.ஆனால் இவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 3 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யப்படலாம் என் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நில மோசடி புகாரில் சிக்கிய செல்வராஜ் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதோடு ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதால் அதன் முடிவு தெரியும்வரை தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்றும் செல்வராஜ் தரப்பில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செல்வராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.செல்வராஜூக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும், அப்படி கிடைத்ததும் அந்த உத்தரவை வைத்து ராதாரவி, சரத்குமார் இருவரும் ஜாமீன் பெற்றுவிடலாம் என ராதாரவி தரப்பில் யோசித்தார்களாம்.ஆனால், நில மோசடி வழக்கில் ஆதாரங்கள் மிக சரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்தை எட்டியது.நடிகர் சங்க நில மோசடி வழக்கில் செல்வராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால் அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராதாரவி, சரத்குமார் ஆகியோர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!