
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'சாமுராய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கும் படங்கள் வழக்கமான கமர்ஷியல் படங்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும், இயல்பாகவும் இருந்தது இவரை ரசிகர்கள் மத்தியில் தனியாக அடையாளப்படுத்தியது.
குறிப்பாக இவர் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி', மனிஷா யாதவ் நடித்த 'வழக்கு எண் 18 / 9 ' ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வழக்கு எண் 18 / 9 படத்திற்காக தேசிய விருது, உட்பட பல விருதுகளைப் பெற்றார். இதைத்தொடர்ந்து, 'யார் இவர்கள்', 'ரா ரா ராஜசேகர்' ஆகிய படங்களை இயக்க உள்ளதாக அறிவித்தார் பாலாஜி சக்திவேல். பின்னர் அந்த படங்கள் கிடப்பில் போடப்பட்டது.
சமீபத்தில் இயக்குனர் என்பதைத் தாண்டி, 'அசுரன்' , 'வானம் கொட்டட்டும்' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியில் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை இயக்குனர் பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் காலமானார். இதையறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.