இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் டைட்டிலோடு வெளியான ஃபர்ஸ்ட் லுக்..!

By manimegalai aFirst Published Sep 23, 2020, 1:54 PM IST
Highlights

இயக்குனர் பாலா, கடைசியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்த,   ‘வர்மா’ திரைப்படம் இயக்கினார். அந்த படம், ரிலீஸாகாத நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்றாலும், பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனம் ஒரு படத்தை தயாரித்து வருகிற தகவலும், இந்த படத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடிக்கும் தகவலும் வெளியானது. 
 
இயக்குனர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் முரட்டு வில்லனாக அறிமுகமாகி, தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வந்த ஆர்.கே.சுரேஷ் இந்த படத்துக்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், இன்று வெளியாகியுள்ளது.   இந்த படத்திற்கு ‘விசித்திரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

ஆர்கே. சுரேஷ், பூர்ணா உள்பட பலர் நடிக்கும் இந்த படம் பத்மகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வருகிறது என்பதும், இந்த படம் மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.

Here’s the first look of Dir sir presents 👍

Wishing brother the best & Dir @shark9pictures & entire team a huge success😊👍 pic.twitter.com/RftCeO1Jf7

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

click me!