காதல் மனைவிக்கு அழகாக ஐஸ் வைத்த அட்லீ... எப்படி பிறந்த நாள் வாழ்த்து சொன்னார் தெரியுமா?

Published : Dec 07, 2019, 01:34 PM IST
காதல் மனைவிக்கு அழகாக ஐஸ் வைத்த அட்லீ...  எப்படி பிறந்த நாள் வாழ்த்து சொன்னார் தெரியுமா?

சுருக்கம்

இதனிடையே, இன்று தனது மனைவி பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெறி பட டைலாக்கை வைத்து அசத்தலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் அட்லீ.  

நடிகர் விஜய் உடன் அடுத்தடுத்து அட்லீ கூட்டணி அமைத்த 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய 3 படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. தொடர் வெற்றியால் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்துள்ள அட்லீ, பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அடுத்து அட்லீ யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. தமிழில் ஏற்கனெவே சுட்ட கதை சுட்டு படம் எடுப்பதாக அட்லீ மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், தனது கமர்சியல் டெக்னிக்கால் அதை தவிடு பொடி ஆக்கி வருகிறார். 

தனக்கென தனி மேக்கிங் ஸ்டைல் வைத்துள்ள அட்லீ, அதை தனது முதல் படமான ”ராஜா, ராணி”யிலேயே நிரூபித்தார். கனா காணும் காலங்கள் டி.வி. தொடரில் அறிமுகமாகி, "சிங்கம்", "நான் மகான் அல்ல" போன்ற நடித்த பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அட்லீ. கோலிவுட்டே பொறாமைபடும் அளவிற்கு இருவரும் வாழ்ந்து வருகின்றனர். ஷூட்டிங் காரணமாக நீண்ட நாட்களுக்கு மனைவியை பிரிந்திருக்கும் அட்லீ, அவ்வப்போது ப்ரியாவிற்கு சர்ப்பிரைஸ் கிப்ட் கொடுத்து அசத்தி வருகிறார். சமீபத்தில் திருமணநாளை கொண்டாட பாரீஸ் நகருக்கு பறந்த இந்த இளம் காதல் தம்பதியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

இதனிடையே, இன்று தனது மனைவி பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெறி பட டைலாக்கை வைத்து அசத்தலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் அட்லீ.  சந்தித்தோம், நண்பர்கள் ஆனோம், திருமணம் செய்து கொண்டோம், எனக்கு மனைவியானாய், நீ எனக்கு மகளானாய்,  இப்போது நீ எனக்கு எல்லாமுமாக இருக்கிறாய். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா என்று பதிவிட்டுள்ளார். பிரியாவிற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனமுருகி அட்லீ போட்டுள்ள பதிவு, லைக்குகளை குவித்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!