தெலுங்கானா என்கவுண்டர் போலீசாரை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்..!! தமிழக போலீசாரை குத்தி காட்டும் கஸ்தூரி..!!

Published : Dec 07, 2019, 12:55 PM IST
தெலுங்கானா என்கவுண்டர் போலீசாரை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்..!! தமிழக போலீசாரை குத்தி காட்டும் கஸ்தூரி..!!

சுருக்கம்

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் என்கவுண்டர் தொடர்பாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்,

ஹைதராபாத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் அதிகாரிகளை பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார் .  அவரது கருத்து  சமூகவலைதளத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவரை  குறிவைத்து பாலியல் பலாத்காரம்  செய்த லாரி ஓட்டுனர் உட்பட 4 பேரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.  பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.  

நாடு முழுவதும் உள்ள பெண்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் சிறையில் இருந்த அந்த நான்கு  பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு  கொண்டுவந்த பொலீசார் பெண் டாக்டர் கொலை எப்படி செய்யப்பட்டது என்பது குறித்து ஒத்திகை செய்து காட்ட அழைத்து வந்தனர் .  அப்பொழுது  திடீரென நால்வரும்  தப்பி ஓட முயன்றனர் அப்போது அவர்களை என்கவுண்டர்  செய்து  கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .  நான்கு பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு பொதுமக்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.  ஆனாலும் வழக்கறிஞர்கள் , மனித உரிமை  ஆர்வலர்கள் ,  மற்றும் தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் என்கவுண்டருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

அதே நேரத்தில் இதுபோன்ற என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்ந்தால் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையும் எனவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏன் இதுபோன்ற நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லை எனவும் கருத்துக்கள் எழுந்து வருகிறது  .  இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் என்கவுண்டர் தொடர்பாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்,  அதில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன் நிறுத்தாமல் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ,   உன்னாவ்,  மற்றும்  பொள்ளாச்சிக்கு அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார் .   

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chinna Marumagal Serial: சின்ன மருமகள் சீரியலில் புதிய திருப்பம்! விஜய் டிவியின் சர்ப்ரைஸ் பிளான்!
Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!