
இயக்குனர் அட்லீ சீனா - இந்தியா இடையே ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு தன்னுடைய அஞ்சலியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் ஏற்கனவே 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்ததாக நேற்று காலை தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. . மேலும் சிலர் படுகாயமடைந்து இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.
சீனா தரப்பில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 43 என்று ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், இதில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக... இயக்குனர் அட்லீ தமிழகத்தைச் சேர்ந்த பழனி மற்றும் சந்தோஷ் பாபு, ஓஜா ஆகிய மூவரின் புகைப்படத்தை வெளியிட்டு சல்யூட் என்று கூறி இதய பூர்வமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.