நடிகர் சுஷாந்த் தற்கொலையில் அதிரடி திருப்பம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 17, 2020, 1:09 PM IST
Highlights

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

 

இதையும் படிங்க: 

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருடைய நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று அவருடைய தாய் மாமன் சந்தேகம் எழுப்பியது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சஞ்சய் நிருபம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: 

கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான  சிச்சோரே படத்திற்கு பிறகு அவர் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததாகவும், கடந்த 6 மாதங்களில் சுஷாந்த் கைவசம் இருந்த அத்தனை படங்களும் கைநழுவி போனதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: 

பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர், கரண் ஜோகர் உள்ளிட்ட 8 பேர் மீது, பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  சுஷாந்தை படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அந்த 8 பேர் மீதும் மிரட்டல், தற்கொலைக்கு தூண்டிதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!