அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... கவலைக்கிடமான நிலையில் பிரபல இயக்குநர்... தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 17, 2020, 11:56 AM IST
Highlights

வீடு வந்த சில மணி நேரங்களிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட, திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியாகி கேரளாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் அந்த மலையாள திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரிட்டயர்ட் ராணுவ வீரருக்கும், ரிட்டயர்டு ஆகப்போகும் இன்ஸ்பெக்டரும் இடையேயேன ஈகோவை ஏதார்த்தம் ப்ளஸ் சுவாரஸ்யத்துடன் விவரித்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பலரும் கைப்பற்ற போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியது. இந்த படத்தில் நடிக்க தமிழ் நடிகர்களும் ஆர்வமாக இருந்தனர். அதே சமயத்தில் சரத்குமார் - சசிகுமார், சசிகுமார்  - ஆர்யா என பலர் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் கூட இந்த படத்தில் அண்ணன், தம்பிகளான சூர்யா, கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை இருவரும் மறுத்தனர். 

இதையும் படிங்க: 

இந்நிலையில் நேற்று பிரபல திரைக்கதை ஆசிரியரும்,  “அய்யப்பனும் கோஷியும்” படத்தின் இயக்குநருமான சச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 15ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நேற்று வீடு திரும்பியுள்ளார். வீடு வந்த சில மணி நேரங்களிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட, திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: 

இயக்குநர் சச்சியின் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஜூன் 16ம் தேதி காலை மாரடைப்பு காரணமாக இயக்குநர் சச்சி, வேறு ஒரு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு அனுமதிக்கப்பட்டார். அவர் இங்கு வருவதற்கு முன்பே வேறு ஒரு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சச்சி ஆபத்தான நிலையில் உள்ளார். எனவே அவரை சிசியூவில் (Critical Care Unit)  வைத்துள்ளோம். அவருக்கு வெண்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக சிடி ஸ்கேன் செய்த போது,  மூளையில் “ஹைபோக்சிக் பிரைன் டேமேஜ்”  ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் குழு சச்சிக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய உடல் நிலை குணமடைவது குறித்து 48-லிருந்து 72 மணி நேரங்கள் கழித்து தான் கூற முடியும்” என்று குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மலையாள பிரபலங்களையும், திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

click me!