பிரமாண்டமாய் திருமணம் செய்ய நினைத்து எளிமையாக கோவிலில் நடந்த நடிகரின் மகன் திருமணம்!

Published : Jun 16, 2020, 08:13 PM IST
பிரமாண்டமாய் திருமணம் செய்ய நினைத்து எளிமையாக கோவிலில் நடந்த நடிகரின் மகன் திருமணம்!

சுருக்கம்

அனைவரது வாழ்க்கையிலும் திருமணம் என்கிற நிகழ்வு ஒரு முறை மட்டுமே வருவதால் அதனை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பது தான் பலரது ஆசை. சிலர் மட்டுமே மிகவும் எளிமையாக தங்களுடைய திருமணம் நடந்தால் போதும் என நினைப்பார்கள்.  

அனைவரது வாழ்க்கையிலும் திருமணம் என்கிற நிகழ்வு ஒரு முறை மட்டுமே வருவதால் அதனை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பது தான் பலரது ஆசை. சிலர் மட்டுமே மிகவும் எளிமையாக தங்களுடைய திருமணம் நடந்தால் போதும் என நினைப்பார்கள்.

ஆனால் திரையுலகை சேர்ந்த பலர், மூன்று நாள் முதல் 5 நாட்கள் வரை தங்களுடைய திருமணம் பிரமாண்டமாக நடைபெற வேண்டும் எனபிளான் போட்டு நடத்தி வருகிறார்கள். இது இந்த காலத்தில் ஒரு ட்ரெண்டாகவும் பார்க்கபப்டுகிறது.

அதே நேரத்தில் தற்போது பரவி வரும் கொரோனா அச்சம் காரணமாக, பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட பல திருமணங்கள் மிகவும் எளிமையான முறையில் நடந்து வருகிறது. அந்த வகையில், புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ரெஞ்சி பனிக்கர் அவரின் மகன் நிகில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஆசை பட்டு மிகவும் எளிமையாக நடத்தி முடித்துள்ளார்.

நிகிலுக்கும் - மேகாஸ்ரீ குமார் என்ற பெண்ணுக்கும் கேரளாவிலுள்ள ஆரன்முளா கோவிலில் இரு வீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வெளியாகவே தொடர்ந்து பலர் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நிகில் தற்போது ஒரு படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது
யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!