’என் மனைவி அழகாக இருப்பதைக் கூட பலரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை’...செண்டிமெண்டால் தாக்கும் ‘பிகில்’அட்லி...

By Muthurama LingamFirst Published Sep 20, 2019, 4:02 PM IST
Highlights

'ராஜா ராணி', 'தெறி' வரை அந்த சட்டையைத்தான்  அணிந்தேன். ஆனால் அது 'மெர்சல்' சமயத்தில் எனக்குப் பொருந்தவில்லை. அதனால் வருத்தமாக இருந்தேன். ஆனால் விஜய் சார் அந்தப் படம் செய்ய ஒப்புக்கொண்டார். அப்போதுதான் சட்டை எனது அதிர்ஷ்டம் இல்லை, விஜய் சார் தான் என் அதிர்ஷ்டம் என்று புரிந்தது.விஜய் சார் நிலையில் இருக்கும் ஒருவர் எளிதாக ஒரு மாஸ் படம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் இப்படி பெண்கள் உரிமைக்கான படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எழுத்து, இயக்கம் என இரண்டு விதத்திலும் ’பிகில்’ இதுவரை நான் எடுத்ததில் சிறந்த படமாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.
 

அரசியல் பஞ்ச் டயலாக்குகளுக்கும், ஆர்ப்பாட்டமான உதார்களுக்கும் கிடைக்கும் மைலேஜ் எப்போதுமே செண்டிமெண்டான பேச்சுக்களுக்குக் கிடைப்பதில்லை என்பதால் ‘பிகில்’பட விழாவில் இயக்குநர் அட்லி பேசிய பேச்சை விஜய் ரசிகர்கள் உட்பட ஒருவருமே பொருட்படுத்தவில்லை. தனது கருப்பு நிறம் கிண்டலடிக்கப்படுவதையும் தனக்கு அழகான மனைவி அமைந்தது குறித்து பலர் ஏளனம் செய்துவருவதையும் குறித்து மனம் திறந்து பேசினார் அட்லி.

அவ்விழாவில் பேசிய அட்லி,''நான் கதை சொல்லும்போது எப்போதுமே எனது பழைய சாம்பல் நிற சட்டையைத் தான் போட்டுக் கொண்டு போவேன். அதுதான் எனக்கு அதிர்ஷ்டம் என்று நினைத்தேன். 'ராஜா ராணி', 'தெறி' வரை அந்த சட்டையைத்தான்  அணிந்தேன். ஆனால் அது 'மெர்சல்' சமயத்தில் எனக்குப் பொருந்தவில்லை. அதனால் வருத்தமாக இருந்தேன். ஆனால் விஜய் சார் அந்தப் படம் செய்ய ஒப்புக்கொண்டார். அப்போதுதான் சட்டை எனது அதிர்ஷ்டம் இல்லை, விஜய் சார் தான் என் அதிர்ஷ்டம் என்று புரிந்தது.விஜய் சார் நிலையில் இருக்கும் ஒருவர் எளிதாக ஒரு மாஸ் படம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் இப்படி பெண்கள் உரிமைக்கான படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எழுத்து, இயக்கம் என இரண்டு விதத்திலும் ’பிகில்’ இதுவரை நான் எடுத்ததில் சிறந்த படமாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

மற்ற ஹீரோக்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விஜய் சார் எப்போதும் என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் என்னால் முடியவில்லை. இந்த தேசத்திலேயே சிறந்த நடனம் ஆடுபவர், முன்னணி நடிகர் உங்களிடம் இருக்கும் போது வேறு யாரும் மனதில் வர மாட்டார்கள். அவரை நான் வேறொரு தளத்தில் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை நான் என் அண்ணனுக்காகச் செய்வேன். யாராலும் தடுக்க முடியாது. பொதுவாக இயக்குநர்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், நான் மிகப்பெரிய விஜய் ரசிகன்.

ஆங்கிலம், இந்தி ஆகியவை வெறும் மொழிகள் மட்டுமே. அவற்றை வைத்து ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தை எடை போடக்கூடாது. அதே போலக் கருப்பு, வெள்ளை எல்லாம் வெறும் நிறங்களே. ஒருவரின் தோல் நிறத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது. என்னை வெறுப்பவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதால் தான் எப்போதும் என்னைப் பற்றியே பேசுகின்றனர். அவர்களை வெற்றி பெறுவதுதான் இங்கு உண்மையான ஆட்டம். நான் காப்பி அடிப்பவன், எனக்கு அழகான மனைவி கிடைத்திருக்கக்கூடாது என்றெல்லாம் பேசுகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவே இல்லை’என்று செண்டிமெண்டாகத் தாக்கிய அட்லி ‘பிகில்’படத்தின் ட்ரெயிலர் தயாராகிவிட்டதாகவும் அது அக்டோபர் முதல் வாரத்தில் ரிலீஸாகும் என்றும் சொல்லி தனது பேச்சை நிறைவு செய்தார்.

click me!