அமலா பால் முன்னாள் கணவருக்கு இன்று பிறந்தநாள்... மகனின் பிஞ்சு விரல்களை பற்றிய படி வெளியிட்ட அசத்தல் போட்டோ!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 18, 2020, 07:44 PM IST
அமலா பால் முன்னாள் கணவருக்கு இன்று பிறந்தநாள்... மகனின் பிஞ்சு விரல்களை பற்றிய படி வெளியிட்ட அசத்தல் போட்டோ!

சுருக்கம்

இந்லையில் இயக்குநர் ஏஎல் விஜய் இன்று தனது பிறத்த நாளை கொண்டாடி வருகிறார். தனது மகனின் பிஞ்சு விரலை பற்றிய படி ஏ.எல்.விஜய் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அசத்தல் புகைப்படம்... 

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான ஏ.எல்.விஜய் இயக்குநர் அவதாரம் எடுத்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.  தல அஜித்தை வைத்து ’கிரீடம்' படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதன் பின்னர் ஆர்யாவை வைத்து மதாராசபட்டினம், விஜய்யை வைத்து தலைவா, பிரபு தேவாவை வைத்து தேவி என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெற்றார். விக்ரம், பேபி சாராவை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. 

அந்த படத்தில் நடிக்கும் போது அமலா பாலுக்கும், ஏ.எல்.விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின்னர் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

இதையும் படிங்க: 39 வயசில் இது தேவையா?... ஓவராக கவர்ச்சி காட்டிய கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

தற்போது அமலா பால் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வர, இயக்குநர் ஏ.எல்.விஜய் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்டோரை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் - ஐஸ்வர்யா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இயக்குநர் விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 

 

இதையும் படிங்க:  “இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!

இந்லையில் இயக்குநர் ஏஎல் விஜய் இன்று தனது பிறத்த நாளை கொண்டாடி வருகிறார். தனது மகனின் பிஞ்சு விரலை பற்றிய படி ஏ.எல்.விஜய் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அசத்தல் புகைப்படம்... 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!