
போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து பல மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த புதுச்சேரியைச் சேர்ந்த சந்துருஜி என்பவர், கோட்டகுப்பம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தந்திராயன் குப்பம் விருந்தினர் மாளிகையிலும், மோசடி ஆசாமி சந்துரு ஜிக்கு சொந்தமான விடுதி ஒன்றிலும் போலீசார் அதிரடி ஆய்வில் இறங்கினர்.
இதையும் படிங்க: ஸ்ருதி ஹாசனின் அதிரடி கவர்ச்சி... ஆங்கில மேகஸின்களுக்காக எப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க!
அந்த அதிரடி சோதனையில் விடுதிக்குள் ஸ்பா ஒன்று இயங்கி வருவதையும் அதில் இரண்டு பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவ்விரண்டு பெண்களும் சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகைகளாக நடித்து வந்ததும், புதுச்சேரியில் பியூட்டி பார்லரில் தொழில் கற்றுத் தருவதாக கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 39 வயசில் இது தேவையா?... ஓவராக கவர்ச்சி காட்டிய கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
இதையடுத்து புதுச்சேரியைச் சேர்ந்த ஏடிஎம் கார்டு மோசடி ஆசாமி சந்துரு ஜி, அவருடைய நண்பர், விஜயகுமார் விருந்தினர் இல்லத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அனில் ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழில் நடத்தியதாக தந்திராயன் குப்பத்தில் இயங்கி வந்த தனியார் விடுதிக்கும் போலீசார் சீல் வைத்தனர். பாலியல் தொழில் நடத்தி வந்த முக்கிய குற்றவாளியான சந்துரு ஜியின் மகன் உமாசங்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.