’நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்க?’... திருப்பி அடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

By sathish kFirst Published Oct 28, 2018, 10:04 AM IST
Highlights

‘சர்கார்’ திருட்டுக்கதை சமாச்சாரமாக நீண்டநெடிய மவுனம் காத்துவந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நேற்றுமுதல் அதிரடியாக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

‘சர்கார்’ திருட்டுக்கதை சமாச்சாரமாக நீண்டநெடிய மவுனம் காத்துவந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நேற்றுமுதல் அதிரடியாக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

இன்னொருத்தரின் கதையைத் திருடிப்படம் எடுப்பதற்காக என் அப்பனும் ஆத்தாளும் என்னைப்பெத்துப்போட்டார்கள். அதற்காகவா இந்த சினிமாவில் பசி,பட்டினி, தூக்கம், காமம் இழந்து பெருபாடுபட்டேன்’ என்று விளாசும் முருகதாஸ், ‘எனக்கு எதிராகப் பேசும் அனைவருமே அறியாமையால் பேசுகிறார்கள்’ என்கிறார்.

யாரோ ஒரு வருண்ராஜேந்திரனுக்காக வக்காலத்து வாங்கும் பாக்கியராஜ் உடபட யாருமே என்னுடைய பவுண்டட் முழு ஸ்கிரிப்டைப் படிக்க தயாராக இல்லை. சிலரை படம் பார்க்கும்படியும் அழைத்தேன். அதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ‘சர்கார்’ முழுக்க முழுக்க 2018-ல் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை மய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம். நான் திருடியதாகச் சொல்லப்படும் கதை 11 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்கிறார்கள்.

தனது ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டார் என்பதற்காக அரசியலில் குதிக்கிறான் ஹீரோ என்கிற ஒருவரியைத்தாண்டி இந்த இரு கதைகளுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை. இப்படி ஓட்டுப்போட முடியாத நிலைமை சிவாஜி,கமலுக்கு மட்டுமல்ல என்னுடன் வாக்குச்சாவடிக்கு வந்த என் மனைவிக்கும் கூட நிகழ்ந்திருக்கிறது.

ஸோ... நிலைமை இப்படியிருக்க, நான் அமைதியாய் இருக்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக ஆளாளுக்கு கல்லால் அடிக்கிறார்கள். இனியும் மவுனம் காக்கமாட்டேன். என் மீது அவதூறு சொல்லும் அனைவருக்குமே கண்டிப்பாக உள்நோக்கம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். அதனால் இவர்களை நம்பாமல் நீதிமன்றம் சென்றேன்’ என்று கொதியாய்க் கொதிக்கிறார் முருகதாஸ்.

click me!