
பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்தவர்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது. இந்த விவகாரத்துக்கு காரணம் காவ்யா மாதவன் தான் என்று கிசுகிசுக்க பட்ட நிலையில்.
அதை முற்றிலுமாக திலீப் மற்றும் காவ்யா மாதவன் இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர் .
இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திலீப் மற்றும் காவ்யா மாதவன் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
இதனால் மஞ்சுவாரியர் ரசிகர்கள் திலீப்பின் உண்மை முகம் வெளியுலகுக்கு தெரிந்து விட்டது என்றும் சமூகவலைத்தளத்தில் திலீப்பை திட்டி தீர்த்து வருகின்றனர்.
அதிலும் சில ரசிகர்கள் உங்களுக்கு மலர் தூவி பூஜை செய்ய வேண்டும் போல் உள்ளது. எங்கள் ஆதரவு உங்களுக்கே மஞ்சு என்றும் . திலீப் மற்றும் காவ்யாவின் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.
மேலும் மஞ்சு உங்கள் மீதான மரியாதை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள் சரி மிக சரியாக சொன்னபோதும் பலர் இதை நம்பவில்லை ஆனால் இப்போது . நீங்கள் மட்டும் தான் சரி என்று தோன்றுகிறது.
அதனால் தற்போது திலீப்பின் உண்மை முகம் வெளியுலகக்கு தெரிந்தது என்று கூறி வருகின்றனர்.
திலிப்பும், காவ்யா மாதவனும் இணைந்து 15 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.