"காணாமல் போன என் மகன் தான் நடிகர் தனுஷ்" - போட்டோ ஆதாரங்களுடன் போராடும் கிராமத்து பெற்றோர் - எக்ஸ்க்ளூசிவ் இளமை கால படங்கள்

 
Published : Nov 25, 2016, 07:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
"காணாமல் போன என் மகன் தான் நடிகர் தனுஷ்" - போட்டோ ஆதாரங்களுடன் போராடும் கிராமத்து பெற்றோர் - எக்ஸ்க்ளூசிவ் இளமை கால படங்கள்

சுருக்கம்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றுபவர் கதிரேசன். இவரது சொந்த ஊர் திருப்பாசேத்திப்பக்கத்திலுள்ள கல்லூரணி. மனைவி மீனாள். இவர்களுக்கு இரண்டுகுழந்தைகள் . மூத்தவன் கலைச்செல்வன். இவரைத்தான் தனுஷ் என்கிறார் கதிரேசன்.

இரண்டாவது தன பாக்கியம். எஸ்.எஸ்.எல்.சி வரை  வரைமேலூர் ஆண்கள் பள்ளியில் படித்த கலைச்செல்வன்  11 ஆம் வகுப்பை  திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் தொடர்ந்தாராம்.

பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்க வைத்துள்ளனர். பிளஸ் 1 ல் அறிவியல் பாடம் பிடிக்காததால் சொல்லி பார்த்தும் பெற்றோர் கேட்காததால் 2002 ஆம் ஆண்டு  அம்மா, என்னை மன்னிடுங்க.எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான்ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத்தோணுதோ, அப்ப உங்களை தேடிவருவேன்." என்று எழுதிவைத்து விட்டு மாயமானார்  தனுஷ் மன்னிக்கவும் கலைச்செல்வன்.

   பையனைத் தேடி அலைந்து எங்குமே கிடைக்கவில்லை என்ற நிலையில்  ஒரு நாள், தனுஷ் டி.வி-யில் கொடுத்த ஒரு பேட்டியில் நான் மதுரைக்காரன் என்று கூறி மதுரை அருகில் உள்ள  மேலூரை சேர்ந்தவன் என்று கூறினாராம்.

இந்த பேட்டியை பார்த்த அக்கம்,பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் காணாமல் போன உன் மகன் கலை தான் தனுஷ் அடித்து கூறியிருக்கின்றனர். அதற்கு பிறகு  தான் தனது  கலையின் போட்டோவை வைத்து பார்த்துள்ளார். அது தனது மகன் தான் என்று புரிந்ததாம்.  

கதிரேசன் ஊரில் இருப்பபவர்களும் தனுஷ்தான் கதிரேசனைன் காணாமல் போன மகன் என்று அடித்து சொல்கின்றனர். கதிரேசனின் நண்பர்  டிரைவர் ஆபிரகாம் என்பவர் அவர்கள் ஊர் பக்கம் ஷூட்டிங்குக்கு வந்த தனுஷிடம் உங்க அப்பா கதிரேசன் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டுஇருக்காரு என்று சொன்னாராம். 

அதற்கு தனுஷ் " அவர் ஏன்.?கஷ்டப்படனும்.. என்னை வந்துப் பார்க்கசொல்லுங்க.." சொல்லிட்டு ஷூட்டிங்க் போயிட்டாராம்.   ஊர்ல,வேலைப் பார்க்கிற சிவகங்கையில என எல்லோருக்கும் தெரியும் என் மகன் கலைதான் தனுஷ் என்று அடித்து சொல்கிறார் கதிரேசன். என் மகன் தான் தனுஷ் என்பதை  நிரூபிக்க போராடிக்கிட்டு இருக்கிறோம் , சி.எம்.செல்லுக்குக் கூட மனு அனுப்பினேன்.விசாரிக்க சிவகங்கை தாலுகா போலீஸ்ஸ்டேசனுக்கு வர சொன்னாங்க. ஏனோ பெரிய இடத்து விவகாரம் என்று அதோடு நிறுத்திகிட்டாங்க என்கிறார் கதிரேசன்.

தனுஷ் படங்களையும், தன் மகன்கலைச்செல்வனின் படங்களையும் வைத்துப் பார்த்துக் கொண்டே காலம் தள்ளுகிறார்  தாய் மீனாள்.."உறுதியாய் சொல்றேன். என் மகன் கலைசெல்வன் தான் தனுஷ். பெத்தவளுக்கு தெரியாதா.?பிள்ளை யாரென்று..? என்கிறார் தாய் மீனாள். தனது மகன் யாருக்கோ பயப்படுவதாக சொல்லி அழுகிறார்.

 இதே போல் தனுஷ் திருமணத்தின் போதும் ஒரு ஆசாமி கிளம்பி வந்து  எங்களதுபிள்ளை தனுஷ். திரும்பத் தாருங்கள்  என கேட்க  கஸ்தூரி ராஜா வடபழனி காவல் நிலையத்தில் புகார்செய்து பிரச்சனை தீர்ந்தது. 

இது ஒருபுறமிருக்க தனுஷின் இளவயது படம் தந்தை மற்றும் அண்ணன் செல்வராகவன் , அக்காவுடன் இருப்பது இருக்கிறது. ஆகவே இது போன்ற பிரபலங்களுக்கு இது ஒரு பிரச்சனை. கலைச்செல்வன் தான் நேரில் வந்து இதற்கு விடை சொல்ல வேண்டும். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று ஜனவரி 12 ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகர் தனுஷுக்கு சம்மன் அனுப்பி உள்ளார் மேலூர் மாஜிஸ்ட்ரேட்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!