"நடிகர் தனுஷ் எங்கள் மகன்" - சொந்தம் கொண்டாடும் அரசு பஸ் டிரைவர்

 
Published : Nov 25, 2016, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
"நடிகர் தனுஷ் எங்கள் மகன்" - சொந்தம் கொண்டாடும் அரசு பஸ் டிரைவர்

சுருக்கம்

நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்று மேலூரை சேர்ந்த போக்குவரத்து ஓட்டுனர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஜீவனாம்சமும் கேட்டுள்ள இந்த வழக்கில் தனுஷை நீதிமன்றத்த்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

 இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷ். இவரது அண்ணன் செல்வராகவன் திரைத்துறைக்கு முதலில் வந்தார். கஸ்தூரிராஜா தயாரிபாளர், மற்றும் இயக்குனராக இருந்து நொடிந்து போன நிலையில் தனுஷ் நடிப்பதற்காக திரைத்துறைக்கு வந்தார். 

செல்வராகவனின்  இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ் அறிமுகமானார். அடுத்து காதல் கொண்டேன் படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து திருடா திருடி , சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்த தனுஷ் யாரடி நீ மோகினி படத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார். 

 பொல்லாதவன் , வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்கள் அவரை ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்தியது. நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மறுமகன் ஆவார். இந்நிலையில் தனுஷ் எங்கள் மகன் தான் என்று சிவகங்கை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும்மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் எனபவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அவரது வழக்கில் தனுஷ் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது படத்தில் நடிக்கிறேன் என்று காணாமல் போனதாகவும் , அதன் பின்னர் திரைப்படத்தில் பார்க்கும் போது காணாமல் போன தனது மகன் தான் தனுஷ் என தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 தற்போது மகனை இழந்து வாடும் தங்களுக்கு தனுஷ் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் வரும் ஜனவரி 12 க்கு வழக்கை ஒத்திவைத்து அன்று தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தர்விட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!