
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய தினம் போட்டியாளர்கள் யாரும் வெளியே செல்லாத நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் படலம் இன்று, மிகவும் வித்தியாசமான முறையில் நடக்கிறது. இது குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: ஹீரோயின்களை மிஞ்சிய விஜய் டிவி சூப்பர் சிங்கர் 'ராஜலக்ஷ்மி'! பொறாமைப்பட வைக்கும் அழகில் போட்டோ ஷூட்!
கார்டன் எரியாமல், 16 போட்டியாளர்களின் புகைப்படங்கள் அவரவர் பெயர் போடப்பட்ட பெடஸ்டலில் வைக்கப்பட்டிருக்கும் என்று பிக்பாஸ் கூறுகிறார். மேலும் எந்த இருவரை போட்டியாளர்கள் நாமினேட் செய்ய விரும்புகிறார்களோ, அவர்களது புகைப்படத்தை கேமரா முன் காட்டி, சரியான காரணத்தோடு நாமினேட் செய்ய வேண்டும் என கூறுகிறார்.
மேலும் செய்திகள்: 44 வயதிலும் சீரியல் ஹீரோயின்..! போட்டோ ஷூட்டில் அசத்தும் 'அழகு' நாயகி சுருதிராஜ்..!
பின்னர் நாமினேட் செய்யப்பட்டவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதன் படி முதலாவதாக ரம்யா வெளியே வரும் காட்சி, பின்னர் ஒவ்வொருவராக வருவதும் காட்டப்படுகிறது.
மேலும் செய்திகள்:வருங்கால கணவரை கட்டி அணைத்தபடி காதல் செய்யும் காஜல்..! சமூக வலைத்தளத்தை சூடாக்கிய புகைப்படம்..!
ரியோ பாலாஜியின் புகைப்படத்தை காட்டி, சந்தோஷமான தருணங்களை கூட அவர் கெடுப்பது போல் நடந்து கொள்கிறார் என தெரிவிக்கிறார். இதை தொடர்ந்து பேசும் பாலாஜி ரியோ தன்னை கார்னெர் செய்வதாக கூறி, இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் நாமினேட் செய்வது இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.