பிக்பாஸ் ஜூலியை பங்கமாய் கலாய்த்த சுரேஷ் சக்கரவர்த்தி... வைரல் வீடியோ...!

Published : Oct 26, 2020, 12:18 PM IST
பிக்பாஸ் ஜூலியை பங்கமாய் கலாய்த்த சுரேஷ் சக்கரவர்த்தி... வைரல் வீடியோ...!

சுருக்கம்

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் பழைய போட்டோஸ், டிக்-டாக் வீடியோக்கள் ஆகியவை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

பிக்பாஸ் சீசன்  நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் படு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டிற்குள் சரவெடியாக வெடிப்பதோடு மட்டுமல்லாது, கொளுத்தி போட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மன்னனாக வலம் வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அனிதா சம்பத், ரியோ, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், சனம் ஷெட்டி என அடுத்து ஹவுஸ் மேட்களுடன் சண்டை போட்டு தவறாமல் புரோமோ வீடியோக்களில் இடம் பிடித்துவிடுகிறார். 

 

இதையும் படிங்க: சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

கடந்த வாரம் “காடா?, நாடா?” டாஸ்க்கின் போது சனம் ஷெட்டியின் நெற்றியில் சுரேஷ் சக்கரவர்த்தி அடித்துவிட, கோபம் தலைக்கேறிய சனம் “வாடா போடா” என வயது வித்தியாசம் பார்க்காமல் வறுத்தெடுத்தார். முதலில் சனம் மீது விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் மட்டும் அடிக்கலாமா? என எதிர்ப்பாலைகள் கிளம்பியது. ஆனால், கன்செக்ஷன் ரூமுக்குள் “வேணுன்னு பண்ணல பிக்பாஸ்” என பச்சை குழந்தை மாதிரி கதறி அழுத சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவு பெருகியது. 

 

இதையும் படிங்க: இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் பழைய போட்டோஸ், டிக்-டாக் வீடியோக்கள் ஆகியவை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் ஜூலி பேசிய டைலாக் ஒன்றை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி செய்திருக்கும் டிக்-டாக் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படியே ஜூலியை கலாய்க்கும் விதமாக சுரேஷ் சக்கரவர்த்தி பேசி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்