“வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா?”.... தெறிக்கவிடும் சூரரைப் போற்று டிரெய்லர்...!

Published : Oct 26, 2020, 10:52 AM IST
“வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா?”.... தெறிக்கவிடும் சூரரைப் போற்று டிரெய்லர்...!

சுருக்கம்

அதன் படி சற்று நேரத்திற்கு முன்பு சூரரைப் போற்று பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

 

இதையும் படிங்க: சன் டி.வி. ரசிகர்களுக்கு அதிர்ச்சி... விரைவில் நிறுத்தப்படுகிறது பிரபல சீரியல்...!

கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளதால் சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் பிரைமில் வரும் 30ம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் விமானப்படையிடம் இருந்து கிடைக்க வேண்டிய தடையில்லா சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் உருவானது. தற்போது தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டாலும் அமேசான் பிரைமில் இருந்து வெளியீட்டு தேதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை படக்குழு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

இந்நிலையில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட சூர்யா அதில் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு டிரெய்லர் வெளியாக உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் படி சற்று நேரத்திற்கு முன்பு சூரரைப் போற்று பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் பட்ஜெட் ப்ளைட்டை உருவாக்குவதற்காக சூர்யா படும் கஷ்டங்கள் காண்பிக்கப்படுகிறது. “வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா நீ ப்ளைட்டை இறக்கு நான் பார்த்துக்கிறேன்” என சூர்யா ஆவேசமாக பேசும் வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்காக அதிகரிக்கிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் டிரெய்லர் இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!
Jason Sanjay : அப்பா தான் பர்ஸ்ட் சாய்ஸ்... ஜேசன் சஞ்சய்யின் பேட்டியால் விஜய் ரசிகர்கள் செம குஷி!