நீ ஆசைப்பட்டேனு நடிகை சங்கவியை... இந்த சந்திரசேகரை தெரியலையா மிஸ்டர் விஜய்..?

Published : Nov 06, 2020, 11:53 AM IST
நீ ஆசைப்பட்டேனு நடிகை சங்கவியை... இந்த சந்திரசேகரை தெரியலையா மிஸ்டர் விஜய்..?

சுருக்கம்

அஞ்சு படம் ப்ளாப் ஆனாலும் எட்டு காசு வட்டிக்கு சொந்தப்பட, எடுத்து உன்னை ஹீரோவாக்க்கி அழகு பார்த்த இந்த அம்மையப்பன் சந்திரசேகரை  தெரியலையா மிஸ்டர் விஜய்..?   

நடிகர் விஜய்க்கு தெரியாமல் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மகன் பெயரில் கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு எதிராக தனது ரசிகர்கள் யாரும் தந்தையின் கட்சியில் யாரும் இணைந்து கொள்ள வேண்டாம் என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால், விரக்தியான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்க்காக தான் செய்த தியாகங்களை வைத்து கேள்வி எழுப்புவதாக நெட்டிசன்கள் கற்பனையான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.  

அதில், ’’ரசிகன் பட விமர்சனம் குமுதம் வாரப் பத்திரிக்கையில் கேவலமாக எழுதியபோது அந்தப் பத்திரிகை ஆபீஸுக்கு போய் கலாட்டா பண்ண இந்த சந்திரசேகரை தெரியலையா மிஸ்டர் விஜய்?

சந்திரமுகி படத்திற்கு இணையாக வந்த சச்சினை ஓடவைக்க சென்னை கமலா தியேட்டரை குத்தகைக்கு எடுத்த இந்த சந்திரசேகரை தெரியலையா மிஸ்டர் விஜய்..?

நான் கடனால் கஷ்டப்பட்ட காலத்தில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று நாளைய தீர்ப்பு மூலம் அறிமுகம் செய்து தொடர்ந்து பல படங்கள் தோல்வி அடைந்தும் உன்னை முன்னேற்ற செந்தூரப்பாண்டி என விஜயகாந்திடம் கால்ஷீட் பெற்று உன்னை உயர்த்திய இந்த சந்திரசேகரை தெரியலையா மிஸ்டர் விஜய்..?

அஞ்சு படம் ப்ளாப் ஆனாலும் எட்டு காசு வட்டிக்கு சொந்தப்பட, எடுத்து உன்னை ஹீரோவாக்க்கி அழகு பார்த்த இந்த அம்மையப்பன் சந்திரசேகரை  தெரியலையா மிஸ்டர் விஜய்..?

 

வளருகிற புள்ள நீ ஆசைப்பட்ட என்கிற ஒரே காரணத்துக்காக மூன்று படத்துக்கு சங்கவியை ஹீரோயினாக போட்ட இந்த அம்மையப்பன் சந்திரசேகரை உனக்குத் தெரியலையா மிஸ்டர் விஜய்..?’’என கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்