அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா... ‘தலைவர் 169’ வீடியோ பார்த்து எமோஷனல் ஆன பிரபலம் - டுவிட்டரில் நெகிழ்ச்சி

Ganesh A   | Asianet News
Published : Feb 11, 2022, 06:10 AM IST
அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா... ‘தலைவர் 169’ வீடியோ பார்த்து எமோஷனல் ஆன பிரபலம் - டுவிட்டரில் நெகிழ்ச்சி

சுருக்கம்

நேற்று வெளியான ‘தலைவர் 169’ (Thalaivar 169) பட புரோமோவில் ரஜினியின் ஸ்டைலான, கெத்தான தோற்றமும், அனிருத்தின் மாஸான பின்னணி இசையும் இடம்பெற்று இருந்தது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில்  'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார்,  கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு, மிஷ்கின் என பல்வேறு பெயர்கள் அடிபட்ட வண்ணம் இருந்தன.

இந்த லிஸ்டில் கடைசியாக சேர்ந்தவர் நெல்சன் (Nelson). தற்போது விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன், அண்மையில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, காத்திருந்த இயக்குனர்களையெல்லாம் கழட்டிவிட்டு, நெல்சனுக்கு ஓகே சொல்லிவிட்டார் ரஜினி.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்க உள்ளார். நேற்று வெளியான புரோமோவில் ரஜினியின் ஸ்டைலான, கெத்தான தோற்றமும், அனிருத்தின் மாஸான பின்னணி இசையும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆனது.

இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான டிடி (DD), டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “என்னால அழுகைய அடக்கவே முடியலடா நெல்சா... தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு. அனிருத்தின் பிஜிஎம் வெறித்தனமாக இருக்கு” என புகழ்ந்துள்ள அவர், இறுதியில் ‘போங்கப்பா ரொம்ப ஹாப்பி’ என டுவிட்டை முடித்துள்ளார். நெல்சனும், டிடி-யும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?